வரதட்சனை !
வில்லை வளைக்கும்!
வலு கொண்ட!
சீதைகளே!
கொண்டவன்!
பிழைகளை!
தண்டிக்க உரைக்கும்!
கலியுக பவத் கீதைகளே!
பெண்ணினமே கேளீர் - இலக்கண!
மெல்லினமே கேளீர்!
புண்ணியமே உங்கள் தோற்றம்!
பொய்மையில்லை அக்தே திண்ணம்!!
நீங்கள் பாறயை !
துளைத்தெழும் !
வேரென!
துணிவு கொள்க!
பாலெனும்!
உளங்கொண்டு !
கனிவெனும்!
கருனை காண்க!
விண்ணுக்கும்!
மண்ணுக்கும்!
பரந்ததோர்!
பாலமிடுக....!
தையல் சொல் கேளேல்!
என்பதை !
திறுத்தம் செய்க !
மையல் கொள்ளும்!
ஆண்களிடம்!
கவனம் கொள்க!
விரலுடுதுதும்!
மோதிரபோலின்றி - கை!
விரல்கள் தொழும்!
சேலையில் !
நிலைத்திடுங்கள்!
புத்துலகை படைத்திட!
எண்ணுவதை விட!
இத்துலகை திருத்திட!
வழி காணுங்கள்!
இருண்ட வீட்டின் குடும்ப விளக்கு நீங்கள்!
வறண்ட பாலையின் !
துளி மழை நீங்கள்!
உங்கள் !
புன்னகையில் தான் - இப்!
பூமி பூப்பூக்கிறது!
உங்கள் !
கண்ணீரில்தான்!
இங்கே வேர்கின்றது!
மதுபானக் கடைகளை!
மலர் வனமாய்!
மாற்றுங்கள்!
இருள் சூழ்ந்த !
இல்லங்களில்!
புது சுடரேற்றுங்கள்!
தன்னுள்!
முத்து இருப்பதை!
உணராத!
சிப்பி போலில்லாமல்!
தவ பூமிக்கு!
பொன் சுடராய்!
ஒளிருங்கள்!
'நெகிழாத சட்டங்களை !
நெகிழ்த்திடுங்கள்!
அரசியலில்!
புதுமலர்ச்சியை!
புகுத்திடுங்கள்!
கல்வியில்!
புதியதோர்!
விகாரம் செய்யுங்கள்!
கருதரிக்கா பெண்டிரே!
சுவீகாரம் கொள்ளுங்கள்!
மாணவப் பருவத்திலே!
ஆணவம் அகற்றுங்கள்!
வேண்டாத!
ஆசைகளை அகற்றுங்கள்!
இமை நனைக்கும்!
இன்னல்களோ!
இதயம் துளைக்கும்!
துன்பங்களோ!
இனி!
எது வந்தாலும்!
உங்கள்!
உள்ளத்திலிருந்து!
அச்சம் தவீர்
வைரபாரதி