தாயாயிருந்தாள்.. தாயாயிருந்தாள்.. அகதியாயும்!
01.!
தாயாயிருந்தாள் !
---------------------!
(எட்டு வருடம்கழித்து என்னைவிரும்பாத அவளுடன்தொலைபேசியில் உயிர்த்தபோது இது வெறும் சொற்கள்அல்ல உணர்வு)!
என்னில் தொலைந்து!
என்னைத் தொலைத்தவள்!
தொலைதூர நேரத்தில்!
தொலை பேசினோம்!
தூரத்தே அவளிருக்க!
பக்கத்தே நானிருந்து!
வேரைப்பிடுங்கிக்கொண்டு!
திறக்கிறது புத்தகம்!
பக்குவப்பட்ட அந்தச்!
சந்தனத்தின் வாயில்!
கரைந்துகொண்டுருந்தது!
என்னுடனும் தன் பிள்ளையினுடனுமான பேச்சு!
நெற்றியில் குங்குமம்!
உயிர்த்துக்கொண்டிருக்கிறது மூச்சு!
தொட்டிலில் மழலைக்குயில்!
கூவிப்பழக- நான்!
வண்டிலில் நடைபழகிக்கொண்டிருந்தேன்!
பிள்ளை பற்றிச் சொல்லிக்கொண்டு!
என்னைச் சொல்லச் சொன்னாள்!
பிள்ளையின் கவனம் பார்த்து!
என்னையும் கவனித்தாள்!
மழலைச் சத்தம் கேட்டுக்கொண்டு!
என்னைக் கதை கேட்டாள்!
சிலநொடி என்னைவிட்டு!
பிள்ளையைப் பிடித்தாள்!
சிலநொடி பிள்ளையைவிட்டு!
என்னைப் பிடித்தாள்!
புறக்கண்ணால் பிள்ளைபார்த்து!
அகக்கண்ணால் என்னைப்பார்த்து!
அவள்!
தாயின் அக்கறை கொண்ட!
சக்கரைப் பொழுதுகளில்!
பேச்சைநிறுத்தியது பேசி!
நான் அவளுக்குச்சொல்வேன்!
உன் மூத்தமகனுக்கு வயசு ஐந்து!
உன் கடைசிமகனுக்குக்கு வயசு இருபத்தைந்து.!
!
02.!
அகதியாயும் அனாதையாயும்...!
-------------------------------------!
வானத்தின் கீழிருந்தேன்!
மழைகள் கிடைத்தது!
மேகத்தின் கீழ்!
விழுந்தன குண்டுகள்!
ஊர் மரத்தின் கீழிருந்தேன்!
கறுப்புநிழல் நிம்மதி!
இந்தமரத்தில்!
பறவைகள் எச்சம்!
போதிமரமும் அப்படியே!
கிரீடம் கிடைத்தது!
சிலுவையின் கீழ்!
தலையில் முள்ளு!
பட்டம் கிடைத்தது!
தரப்பாளின் கீள்!
அகதி!
பட்டியல் கிடைத்தது!
அகதியின் கீழ்!
அனாதை.!
சங்கைத்தீபன்!
29.3.09
சங்கைத்தீபன்