நினைவு தெரிந்த நாள்!
யாதென யாருக்கு தெரியும்!
உடனே நினைவில் வருவது !
அடம் பிடித்து!
அட்டை போட வைத்திருந்த!
பழுப்புதாள் கற்றையை !
ஒன்றாம் வகுப்பு ஆசிரியை!
எடுத்து கொண்டது !
அம்மாவை பெத்த தாத்தா!
இறந்த விட்ட பொழுது!
ஐந்தாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு!
தனியே பேரூந்தில் சென்றது !
தனி பயிற்சிக்கு செல்லாது!
மாட்டிகொண்டு!
அம்மாவிடம் அடிவாங்கியதென!
சின்ன சின்ன நினைவு திட்டுகள் !
நினைவுகள் மங்கும் நாளில்!
நினைவுகளில் நிற்கும் நினைவுகள்!
பத்து பக்கம் கூட தேறாது !
மற்றவர்கள் நினைவுக்கு!
விட்டு செல்லபோவதென்னவோ!
பெயரும் தோற்றமும் மறைவும்!
ஆக்கிரமிப்பு அகற்றலிலோ!
சாலை விரிவாக்கத்திலோ!
அதுவும் கூட அகற்றபடலாம் !
எள்ளுபெயரன் காலத்தில்!
என்னை பற்றிய!
எல்லாமும் போய்விடும் !
வாழ்க்கை நினைவுகளின் எச்சம்!
எச்சமும் சொச்சமில்லை!
சொச்சமில்லை யென்றாலும்!
சொர்ககம் தான் வாழ்க்கை
வி. பிச்சுமணி