எண்ணற்ற சதிகளினால்!
புனையப்பட்டது வாழ்க்கை!
பிரியங்கள் சுழன்று!
பரவசமடைந்த இடங்கள்…!
வெளிகள்… காடுகள்… ஏகலும்!
அத்துமீறி நுழைந்த!
கறுப்பு அங்கிகளின் கால்சுவடுகள்…!
பூக்களால்!
மண் வாசம் தொட்டு!
நாதத்தில் மிதந்து!
நடனமாடிய கிராமங்கள்…!
மரணபயத்தோடும் உயிராவலோடும்!
பறக்கின்றது இதயங்கள்!
முட்கள் மாலை கோர்த்து!
கடுகதி ஆயுளோடு பற்றி எரிகிறது…!
கடைசி ஒற்றையடிப் பாதையிலும்!
உயிர் தின்னும் காண்டாமிருகங்கள்…!
பதறும் உறவுகளை!
புகைகக்கி!
விதவிதமாய் ருசி பார்க்கிறது!
மாய்ந்து மணற்திட்டியில் செத்து!
கொத்துத் கொத்தாய்ப் பிணங்கள்!
ஊன உடல்களும்!
கட்குழிகளும்!
ஊற்றெடுக்கும் செந்திரவமும்!
எஞ்சிக் கிடந்து என்!
உள்ளத்தைக் கிழித்து!
நஞ்சாக்கி!
நெஞ்சையெல்லாம் எரிக்கிறது!
என் இனம்!
மயான நெருப்பாகி!
அவியாமல்!
நிலைகொண்டெரிவதை!
நிறுத்தத்தவறிய!
மனிதநேயமற்ற உலகே!
உன் மௌனத்தை!
செம்புள்ளிபோல்!
எஞ்சியிருக்கும் நட்சத்திரமும்!
ஏற்க மறுக்கிறது!
24.4.2009
நவஜோதி ஜோகரட்னம்