உயிரிடம் ஒரு சந்தேகம் - பட்டுக்கோட்டை தமிழ்மதி

Photo by FLY:D on Unsplash

இந்த மத்தாப்புக்கு !
ஏன் !
இத்தனை மகிழ்ச்சி? !
ஓ... !
சுடர் நெருப்பை !
தொட்டிருக்கிறது. !
கத்தி !
ஏன் !
பூப்பூவாய் பூரிப்புகளோடு !
பொறிகளை னவுகிறது? !
ஓ... !
உரசல் என்கிற !
உறவில் மகிழ்ந்தா? !
மின் விளக்குகள் !
ஏன் !
வெளிச்ச அலைகளை அள்ளி !
விசுகிறது? !
ஓ... !
நேர்மின் !
எதிர்மின் முனைகள் !
டங்ஸ்டன் இழையில் !
சந்தித்துக் கொண்டனவா? !
எல்லாம் சரிதான். !
நான் !
காதலோடு !
உன் !
மனதைத் தொட்ட !
சிலிர்ப்புகளோடுதானே !
சிரிக்கிறாய். !
-பட்டுக்கோட்டை தமிழ்மதி !
(சிங்கப்பூர்)
பட்டுக்கோட்டை தமிழ்மதி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.