தனிமை - சு.துரைக்குமரன்

Photo by FLY:D on Unsplash

நினைவின் தாகந்தீர்க்கும் !
தண்ணீர்நதி !
திரும்பிப் பார்த்து திருந்த !
வாய்ப்பளிக்கும் கால யந்திரம் !
நினைவின் அலைகளில் !
நெஞ்சைச் சுகமாய் !
மிதக்கவிடக் கிடைத்த !
கால அவகாசம் !
சோகங்களின் ரணங்களை !
கண்ணீர் மயிலிறகால் !
வருட வாய்ப்பளிக்கும் வரம் !
இதய அறைமுழுதும் !
உணர்வுகளை மோதவிட்டு !
எதிரொலி கேட்டு !
அயர்ந்து கிடக்க !
மனம்பாடும் அபசுரம் !
துயரமது ஊற்றிய !
இதயக்கோப்பையை !
இறுதிவரை பருகி !
மயங்கிவிழக் கிடைத்த மடம் !
சூன்யத்தில் கண்கள் நிறுத்தி !
சுகமாய்க் கண்ணீர் சுரக்க !
சோகத்தைக் கழுவிடக் !
கிடைக்கும் கருணையின் கரம் !
நினைவுகளை அசைபோட்டு !
அசைபோடும் இசைகேட்கும் !
அமைதி நிறைந்த மயானம் !
உணர்வுகளின் உளறல்களுக்கு !
ஊக்கம் தந்தவன் !
உயிர்தரச் செய்த சமாதானம் !
அகலக்கால் வைத்தவன் !
அறிவைத் தீட்டி !
ஆக்கத்தில் நிலைக்கும் நிதானம். !
-- சு.துரைக்குமரன்
சு.துரைக்குமரன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.