ஒரு திருமணத்தில்!
ஆரம்பமானது!
உன்னுடனான என் உறவு.!
ஒரு (தலை)தீபாவளி!
ஒரு கிறிஸ்மஸ்!
ஒரு புதுவருடம்!
ஒரு பொங்கல்!
ஒரு “என்” பிறந்தநாள்!
ஒரு “உன்” பிறந்தநாள்!
ஒரு திருமண நாள்!
என்றாக எல்லாம்!
ஒற்றையாக!
பரிசளித்த நீ!
ஒரு விவாகரத்தையும்!
தந்துவிட்டு!
சென்று கொண்டிருக்கிறாய்.!
மீண்டும்!
ஒரு திருமணத்தில்!
ஆரம்பமாக இருக்கிறது!
என்னுடனான என் உறவும்!
உன்னுடனான உன் உறவும் !!!!
!
ஆக்கம்: மாதுமை
மாதுமை