இமைகள் மூட விரியும்!
கனவுத்திரைகளில் அரங்கேரும்!
தேவதை உன்!
நினைவுகளில்,!
மயிலது விரிக்கிறது!
தோகையை அதுபோல்!
மேனகை நீ!
விரிக்கிறாய் உனது!
கூந்தலை...!
உன் விரல் ஸ்பரிசம்!
பட்ட ஒரே காரணத்தால்!
நான் எங்கு சென்றாலும்!
என்னுடனே பயணிக்கும்!
இந்த புத்தகத்தின்!
ஏதோவொரு பக்கத்தில்!
நிரந்தரமாய் தங்கிவிட்ட!
இந்த மயிலிறகிற்க்கும்,!
வருணன் கண்விழித்துவிட்டான்!
என பொய்யுரைக்கும்!
தோகையாய் விரியும்!
உன் கருமேகக்கூந்தலுக்கும்!
வித்தியாசங்கள் ஒன்றே ஒன்றுதான்!
என்றே உரத்துக்கூறுவேன்..!
என்னவென்று கேட்போருக்கு!
பதிலுரைப்பேன் முன்னது!
மயிலுடையது,!
பின்னது என்னவளுடையது!
என்றே
ராம்ப்ரசாத், சென்னை