அழகாய் உடைதல்! - லதாமகன்

Photo by Tengyart on Unsplash

உடைந்து போகும் நீர்குமிழி ஒன்று!
புகைப்படங்களாய்!
அலைந்து கொண்டிருக்கிறது!
மின்னஞசல் பெட்டிகளில்!
சரி!!
அழகான ஒன்றை!
அழகாய் உடைத்தவன் யார்?!
அழகற்ற உடைப்பை!
அழகாய் எடுத்தவன் யார்?!
!
குருவிகளுக்கு நீர்வைக்கச் சொல்லி!
மின்னஞ்சல் செய்தான் ஒருவன்!
வைத்த நீரை எடுப்பதற்கு!
எந்த குருவியும் இல்லை!
என் ஊரில் என!
மறுமொழி அனுப்பினேன்!
பதில் இன்று வரை வரவில்லை!
!
மூன்று மாதங்களுக்கு முன்!
என் சகோதரிக்கு இரத்தம் கேட்டு!
நான் அனுப்பிய மின்னஞ்சல் ஒன்று!
யாரிடமிருந்தோ!
இன்று எனக்கே வந்து சேர்ந்தது.!
அவள் இறந்துபோன விஷயத்தை!
எப்படி யாரிடம் சொல்வது?!
!
குறுஞ்செய்தியில்!
நண்பர்கள் தின!
வாழ்த்தனுப்பியவனின் !
பெயர்!
சந்தித்த இடம்!
எதுவும் நினைவில்லை!
எப்படிக் கேட்பது?!
அவனுக்காவது !
என் முகம்,!
நிகழ்வுகள் நினைவிருக்குமா?!
சரி Same to You!!
!
30 பேருக்கு !
பார்வார்ட் செய்தால்!
அதிர்ஷ்டம் அடிக்குமென்றபடி!
வந்துசேர்ந்தார் கடவுள்!
புன்னகைத்துவிட்டு கொன்று விட்டேன்!
சிரித்த்தபடி செத்துப்போனார்!
இல்லாத கடவுள்!
லதாமகன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.