பயணம் - கனிகை

Photo by engin akyurt on Unsplash

பேரூந்திற்காக நின்றேன்;!
வந்தது;!
ஏறிக்கொண்டேன்;!
சனநெரிசல்;!
திக்குமுக்காட்டம்;!
இடம் தந்தாய்;!
சிநேகமானாய்;!
என் பொதிகள் அழுத்தின;!
நீ சுமந்தாய்;!
நெருக்கமானேன்;!
உண்ணக் கடலை தந்தாய்;!
வாங்கிக் கொண்டேன்;!
யாவருடனும் உரையாடினாய்;!
மௌனித்தாய்;!
உதவினாய்;!
சிந்தை வயப்பட்டாய்;!
வாழ்வு சொன்னாய்;!
பரபரப்பானாய்;!
அடிக்கடி பார்த்தாய்;!
கேள்விக் கண்ணானேன்;!
இறங்கி நடந்தாய்;!
மறிக்கத்தோன்றவில்லை;!
நான் இறங்கவுமில்லை;!
யாவரும் இரங்கினர்;!
நான் வெற்றிருக்கை பார்த்தேன்.!
கனிகை
கனிகை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.