போதிப்புச் சிறை!
!
நாங்கள்!
விழித்து விழித்து!
எழ எத்தனிக்கையில்!
நீங்கள்!
தாலாட்டாய்ப் பாடிக்கொண்டேயிருக்கிறீர்கள்!
வகுப்பில் பாடங்களை...!
-அசரீரி- !
தேர்தல் வருவதும் திரும்பத் திரும்ப அலியோடு கலவுதலும்*!
!
அலியோடு கலவுதல் பற்றி!
குற்ற உணர்வேயற்ற ஆம்புளை போல!
இந்த மாட்டுக் கூட்டமும் மீண்டும் ஏறியிருக்கிறது!
பெரிய மலை என்ற நினைப்புடன்!
எங்களின் காதுகளைப் போட்டு வதைக்க!
சாரனும் விலகியிருக்கிறது!
இதில்!
ஒன்றுமே அசைவைத்தராத மல்லாக்கப்படுக்கை!
எங்களுடையதாகவிருக்கிறது.!
ஒரு குதிரை அல்லது கழுதை எனுமளவுக்கு!
அவர்களுக்கு ஏறக்கொடுத்த!
இருபது இருபத்தைந்து வரிஷமாய்!
இது நடக்கிறதுதான்!
கலிமாச் சொல்வர்!
களைக்கக் களைக்க கூட்டமாயும் தனியாகவுமாக வந்து!
திரும்பத் திரும்ப ஏறுவர்!
நாங்கள் முளைத்து வந்து ஆணாகிப் போய்விட்டதும்!
அறிந்துகொள்ளாதபடி!
எண்டல்லாவேய்!!!!
இன்னமும் இன்னமும்!
ஒன்றுமே அசைவைத்தராத மல்லாக்கப்படுக்கை!
எங்களுடையதாகவிருக்கிறதே றப்பே...!!!!
-அசரீரி
அசரீரி