ஒத்தைக் கல் நட்டி!
ஒரு பொட்டுச் சந்தனமிட்டு!
உண்டு மீந்த பணியாரத்தை!
கற்றாழையில் படையலிட்டு!
ஒட்டியாணம் போன்று!
அவரைக்கொடி அணிவித்து!
முழு நிலவொளியில்!
வெங்கக் கல் பளபளக்க!
விளையாட்டு சிறுசுகள்!
ஆக்கிவைத்த கடவுளை!
துச்சமென்று ஒதுக்கி!
வானையும் மண்ணையும் மறைத்து!
வளர்ந்த கட்டிடத்தில்!
கடவுளை அடைத்து!
பன்னீரில் குளிப்பாட்டி!
பல்லக்கில் ஏற்றி!
ஆண்டுக்கு ஒருமுறை!
அவன்படைத்த உலகை காட்டும்!
கனவான்களே!
எத்திசை நோக்கி!
உம் கரம் நீட்டினால்!
அத்திரு கடவுள் உம்மை நோக்குவன்!
எனச் சொல்லும் பெரியோர்களே!
உருவமுள்ளது கடவுள் ஆகுமா!
என வாதிடும் ஆன்றோர்களே!
பாலகரின் படிதளுக்கு!
தன் தாள் படியாது!
பல்லக்கில் அவன் பவனி வந்தால் ,!
பிள்ளை வடிவம் கொண்டு!
பலகரோடு பழக!
உருக்கொண்டு அவன் வர தவிர்த்தால்!
ஆண்டவனே ஆனாலும்!
ஆண்டாண்டு காலமாய்!
எமை ஆண்டவனே ஆனாலும்!
அவன் எம் குலப் பகைவன்
சின்னு (சிவப்பிரகாசம்)