தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

பங்குனி

றஞ்சினி
நான் அவன் !
நானாக அவனும் அவனாக நானும் !
சாத்தியமில்லை !
எனது சந்தோசங்கள் அவனது சந்தேகங்கள் !
எனது ஆசைகள் அவன் கற்பனை செய்யாதவை !
அவனது ஆசைகள் என்னை அடிமை கொள்பவை !
எனது கற்பனைகள் அவனுக்கு புரியாதது !
அவனது கற்பனைகள் அலுத்துப்போனவை !
எனது நோக்கு அவனுக்கு புதியது !
அவனது நோக்கு எனக்கு பழயது !
அவன் வளர்ந்தும் ................ நான்............ !
நான் குழந்தை அவன் !
நான் அவனாவதும் அவன் நானாவதும் சாத்தியமே இல்லை !
நான் நான் அவன் அவன் !

நானொரு காகமாகி

அசரீரி
துணையின்றித் தனித்தலையும்!
தேசாந்திரித்தனத்துடன்!
காற்றில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறேன்!
என்ன பாரந்தான் நான் என்பதன் புதிர்!
என்னில் அவிழ்ந்து!
சிறகை முளைப்பிக்கிறது தோள்களில்!
சூரியன் அது!
காகமாகிய என் வானத்திலும்!
ஒன்று தெரிகிறது இப்போது!
பறித்த பின் துரத்திவிடப்பட்ட என்!
வயலுக்குள்ளும்!
புத்தகங்களுக்குள்ளும் தனித்து!
பட்டுப் போய் நிற்கின்ற மரத்தின் மீது!
பறந்து போய் நிற்கக் கனவு கண்ட ஓர் பகலில்!
சூரிய நிழலின் கறுப்போடு கறுப்பாக!
காகமாகிய நானும் போய்வரத் தலைப்பட்டேன்.!
ஊரின் எல்லையில் வைத்தே!
என் வாலில் நெருப்புப் பிடித்தது!
எரிவோடும்!
மூலத்திலிருந்து சொட்டத் தொடங்கிய!
ஒழுக்குகளோடும்!
காற்றை இழுத்துப் பிடித்துக் கொண்டபடி!
வெகுதூரம் மிக வெகுதூரம் வந்துவிட்ட நம்பிக்கையுடன்!
திரும்பிப் பார்க்கிறேன்!
உள்ளுர்ப் பத்திரிகையொன்றின்!
பாராட்டுக் கவிதை வரிகள் போல கிடக்கிற!
என்னைப் பார்த்து!
பரிதாபமாய்ச் சிரிக்கிறது காலம்!
ஊரின் எல்லைக்குள் வைத்தே

யாருக்கும் வெட்கமில்லை

சத்தி சக்திதாசன்
சத்தி சக்திதாசன் !
உண்பதற்கு உணவில்லை !
உடுப்பதற்கு உடையில்லை !
உள்ளத்திலே அன்பில்லை !
உதட்டினிலே உண்மையில்லை - ஆனால் !
யாருக்கும் வெட்கமில்லை !
படுப்பதற்கு பாயில்லை !
பழக ஒரு நண்பனில்லை !
பணத்திற்குப் பாசமில்லை !
பாபத்திற்கும் குறைவில்லை - ஆனால் !
யாருக்கும் வெட்கமில்லை !
தேவைகற்கு அளவில்லை !
தேடல்களில் பொருளில்லை !
தௌ¤வான கொள்கையில்லை !
தெரிந்து கொள்ள ஆசையில்லை - ஆனால் !
யாருக்கும் வெட்கமில்லை !
நீதிக்கு வெற்றியில்லை !
நேர்மைக்கு மதிப்புமில்லை !
நேற்றைகளை பார்ப்பதில்லை !
நாளைகளில் அர்த்தமில்லை - ஆனால் !
யாருக்கும் வெட்கமில்லை !
கண்களில் கருணையில்லை !
கடமைகளில் ஆர்வமில்லை !
காதலிலே தூய்மையில்லை !
கடைசிவரை பொறுமையில்லை - ஆனால் !
யாருக்கும் வெட்கமில்லை !
யாருக்கும் வெட்கமில்லை !
யாவையுமே தனதுமில்லை !
யாரையுமே நம்பவில்லை !
யாருமே உறவுமில்லை - ஆனால் !
யாருக்கும் வெட்கமில்லை

நதியென நகரும் வாழ்க்கைப்பயணம்

நிந்தவூர் ஷிப்லி
எது குறித்த அக்கறையுமின்றி நதியென நகரும் வாழ்க்கைப்பயணம்!
என்னை வாழச்சொல்லிச் சபிக்கும்!
காலப்பெருந்துயர நிழலில் மூர்ச்சையற்றுக்கிடக்கிறேன்!
நூற்றாண்டுகள் தாண்டிய இருள்வெளியாய்..!
நகரும் கணங்களின் மிக நிதான திசைகளில்!
எதிரொலிக்கும் என் மௌனக்கதறல்கள்!
துரிதகதியில் காற்றைப்பற்றிக்கொண்டே!
திசைகளை நிரப்புகின்றன..!
நீயும் நானும்!
துரத்தும் மரணக்கால்களின்!
சுவடுகளை அண்மித்தபடி துயரக்கவிதைகளை பாடிக்கொண்டிருக்கிறோம்..!
ஓப்பாரி ராகங்கள் நமது மூங்கில் துளைவழியே!
கசிவது கண்டு வழிப்போக்கர்கள் நம்மை ஏளனிப்பது!
எத்தனை விநோதமானது பார்…!
செல்லும் வழிப்பயணங்களெல்லாம் முடிவிடம் தொடுமென்ற!
அசட்டு நம்பிக்கையில் அவ்வப்போது தீ விழும் துயரம்!
உனக்குமா நிமழ்ந்தேறுகிறது..???!
எது குறித்த அக்கறையுமின்றி நதியென நகரும் வாழ்க்கைப்பயணம்!
எந்தப்புள்ளியிலாவது சந்திக்கலாம்!
இல்லையேல் சந்திக்க முடியாமலே புள்ளிகளாய்த்தொலையலாம்!
அவளும் நானும் பிரிந்தது போலவே!
நீயும் நானும்…

தெளிந்த நல்நீரும் காற்றும்

தமிழ் யாளி
தெளிந்த நல்நீரும் காற்றும்!
------------------------------------!
நாகரீகச் சேறு வழுக்கி!
நவீனப் பள்ளத்தாக்கில்!
விழுந்து மரணத்தோடு!
போராடும் மனிதனுக்கு!
அவசரத்தேவை!
தெளிந்த நல்நீரும்!
காற்றும்!
கூவ நீருக்கும்!
குழாய் நீருக்கும்!
தற்சமயம் நிறபேதம்!
மட்டும் தான்!
இனி குடிமட்டுமல்ல!
குடிநீரும் குடியைக்!
கெடுக்கும்!
கந்தகமும்!
கரியமிலமும் காற்றோடு!
கலப்புமணம்!
புரிந்ததால்!
சுத்தக்காற்று!
வார்த்தையில் மட்டும்!
இனி காச நோயினும்!
காற்று நோய்!
கொடியது!
நிக்கோடினால்!
தேய்பிறையான!
நுரையீரலுக்ககும்!
ஒளிச்சேர்க்கைக்கும்!
கூட திறனிழந்த!
இளந்தளிர்களுக்கும்!
அவசியத் தேவை!
தெளிந்த நல்நீரும்!
காற்றும்!
-------------------!
எழுதியது ...!
பள்ளித்தோழன்!
கு.கண்ணன்!
( தீயனைப்புத்துறை காவலர் )

சீம்பால்

நம்பி
ஏனுங்க அப்பா !
வெல்லக்கட்டி வச்சிருக்கேன் !
கடும்பு குடிக்கனும் !
செவல எப்போ கன்னு போடும்? !
!
மூனு நாளு ஆவுமடா !
நாய் வரமா பாத்துக்கடா !
ஆச்சி வரச்சொன்னாக !
சேதி கேட்டுட்டு வந்துடறேன் !
!
எல நாவைய்யா... !
பெரிய பாப்பா வருதுடா !
சீம்பாலுக்கு சப்பு கொட்டும் !
பேரப்பயலும் ஆசப்படுவான் !
செவலய ஓட்டியாந்து !
தொழுவத்துல கட்டிபுடு !
!
ஈயெறும்பு அண்டாம !
வெல்லம் காத்திருக்கு. !
-- நம்பி

தான் .. மாற்றான் தோட்டத்து காந்த

வி. பிச்சுமணி
தான் (Ego).. மாற்றான் தோட்டத்து காந்த மல்லிகை!
01.!
தான் !
-----------!
உன்னை மாற்றிகொள் எனும் சொல்!
உனது தான் விழிக்க செய்துவிட்டது!
நம்மிடையே அமைதி பள்ளத்தாக்கு!
உன் மனதில் வெறுப்பு மண்டியது!
விரோத கொடி ஆக்டபஸ் கையாய் பரவுகிறது!
உனக்கும் எனக்கும் உள்ள பகைவர்கள்!
சந்தர்ப்பத்தை சாதகமாக்க வளையவருகிறார்கள்!
வெறுப்பு அவர்களை விரட்ட மறுக்கிறது!
தூபங்கள் நம்மை அந்நியபடுத்துகின்றன!
எனக்கெதிராய் கனைகளை ஏவுகிறாய்!
எனது தற்காப்பு கேடயத்தை தாக்கும் ஆயுதம் என்கிறாய்!
சூரியனின் அண்மையினால் நிலவே!
புளுட்டோவின் கோள் அந்தஸ்தை நீக்கிறாய்!
இன்றைய வெற்றி உனதாக இருக்கலாம்!
நாளைய வெற்றி நான் அடையலாம்!
பேசினால் பிரச்சனை தீர்ந்துவிடும்!
யார்வந்து முதலில் பேசுவதென்பது!
அலை நின்றபின் நீந்த கரையில் காத்திருக்கிறது!
நமது நட்பு உதிர்ந்த மலர்களா!
உடைந்த கிளைகளா காலத்தின் கையில்!
02.!
மாற்றான் தோட்டத்து காந்த மல்லிகை!
---------------------------------------------------------!
தொடர்வண்டியில் எதிர் இருக்கை!
பெண்ணின்அப்பழுக்கற்ற பழுப்பு நிற கண்கள்!
மது உண்ட மந்தி போல் மயங்கிபோக வைக்க!
ஏற்றி சீவிய முன்தலையில் நீளம் குறைந்த மயிர்கள் நின்று ஆடிகொண்டிருந்தன!
பின்தலையில் இருக்கை கட்டிய சின்ன குதிரை வால் கொஞ்சம் உயரமாயிருக்க!
சிவந்த நெற்றியில் வைத்த குங்குமம் நீண்ட பயணத்தில் கலைந்து இருந்தாலும்!
புருவங்களில் இடையே சிவப்பு ஒட்டுபொட்டு உதித்து கொண்டேயிருந்தது!
முகத்திறகேற்ற அளவான மூக்கில் சின்ன வெள்ளை மூக்குத்தி!
அடுக்கு முக்கோண கம்மல் அதற்கு மேல் பாந்தமாய்சின்ன சிகப்பு கம்மல்!
நீல வண்ண புட்டா வைத்த சேலை அவளை சுற்றி வளர்ந்திருந்தது!
சட்டை எப்போ இருந்த பெருங்காய பாத்திரம் போல்!
அவளுடைய ஒரு பையன் ஒரு பொன்னும் செய்த குறும்புகளை!
பொய் கோபம் காட்டி அடக்கிய போது ஒர் அழகு மின்னல் ஓடியது!
குளிர் பானத்தில் குளித்த போதும் மேல் உதடைவிட கீழ் உதடு இளம் ரோஜா வண்ணத்தில்பளபளப்பாய் காய்ந்து மின்னின!
நடுவில் அவள் வைத்த ஒரு விரல் இருபக்கமும் இதழ்கள் சமம் என பறைசாற்றியது!
அவள் வயிற்றில் ஆடிய தாலியில் இருந்த கருமணிகள்!
தமிழமகள் இல்லை என்று சொன்னாலும் அவள் பேச்சு செந்தமிழாள் என்றுரைத்து!
புறவழிச்சாலையில் செல்லும் மகிழ்உந்து போல் மெல்லிதாக சிரிப்பு!
ஏறி அமர்ந்ததிலிருந்து அவளையே நோக்கிய உணர்வில் கண்களை திருப்ப எத்தனித்து தோற்று போனேன்!
என்பார்வைகள் அவளிடம் செல்லாத காசாய் திரும்பவந்தன!
அவள் முந்தி பிறந்திருக்கலாம் நானாவது பிந்தி பிறந்திருக்கலாம்!
திருமணங்களுக்கு முன் சந்திக்க வைத்திருக்கலாம்!
இப்படி காலம் கடந்தபின் வந்த தேவதை நான் வாழும் ஊரில் இறங்க!
என்றாவது அவளை ச்ந்திக்கும் சந்தோஷம் மனதில் என்னுடன் இறங்கி வந்தது

தெய்வமனம் அமைந்திடுமோ

கரு. திருவரசு
~ கரு. திருவரசு ~!
பார்வையிலோர் ஓவியமும் பவளவிதழ் சிரிக்கின்ற!
பான்மையிலோர் காவியமும் பதுமையென இருக்கின்ற!
சீர்மையிலோர் சிற்பமதும் செய்திடுவேன் அவையெல்லாம்!
சிந்திடுமோ மழலைமொழி சிறுகுழந்தாய் உனைப்போலே!
!
தடுமாறும் நடைகண்டு தரமான நாட்டியமும்!
தடதடெனத் தளிர்க்கைகள் தட்டுவதில் தாளங்களும்!
திடுமெனநீ அழும்போது தேனிசையும் கற்றிடலாம்!
சிறுதுயிலில் நின்முகப்பூ செய்நடிப்புத் திறம்வருமோ!!
!
சிந்தியமு துண்பதிலே சிறப்பீகைப் பெருங்குணமும்!
தந்தைக்கும் சடைநாய்க்கும் தரும்முத்தச் சமத்துவமும்!
உந்தியுந்தி முயல்வதிலே ஊக்கத்தின் உயர்வடிவும்!
உணர்ந்திடலாம்! உலகிலினி உன்பருவம் கிடைத்திடுமோ!!
!
கரித்துண்டால் கீறுவதில் கன்னியர்செய் கோலங்களும்!
பிரித்துவைத்து நூல்படிக்கும் பேரழகில் இலக்கியமும்!
சிரித்தழுது விழுந்தெழுந்து திரிவதிலே செயல்திறமும்!
தேர்ந்தாலு முனக்கிருக்கும் தெய்வமனம் அமைந்திடுமோ

விரைவில் விடுதலை

வே.மணிகண்டன்
சிற்றுந்தும் பேருந்தும் சீருடையில் புறப்பட்டன!
சின்ன சின்னப் பட்டாம் பூச்சி மாணவமாணவிகளை ஏற்ற!
பள்ளிக்கு குதூகலத்துடன் புறப்பட்டது விபரம் புரியாத விடலைகள்!
குழந்தைகள் அணிவகுத்து நின்றனர்!
கடக்குள் நிற்கும் குட்டிகுட்டிப் படகைப்போல!
பேருந்துக்குள் சிறகொடிந்த சின்னப்பறவைகளாக சிறார்கள்!
பள்ளியைப் நெருங்குகிறது டீசல் பறவை!
படிக்கும் எண்ணத்தில் புறப்பட்ட மொட்டுக்கள்!
ஆல்பர்ட் ஐன்சிடின் குண்டுகளால்!
மத்தாப்பூ பூவாகத் தூக்கிவீசப்பட்டனர்!
மகவைப்பெற்றத் தாய்கள் மரண ஓலமிட்டார்கள்!
மன்னிக்கமுடியதா குற்றமென்று மறு நாள்!
உலக நாட்டுத்தலைவர்கள் ஒப்பாரி வைத்தனர்!
காலங்கள் உருண்டோடுகின்றன கலவரங்கள் கட்டுப்படுத்தப்படவில்லை!
இந்த வெடிகுண்டுகளிடமிருந்து உலகம்!
விடுதலையடையும் விரைவில்!
அன்புடன்!
நிலா

இடைவெளி

தென்றல்.இரா.சம்பத்
1.!
சகியே.........!
நானாக நானிருந்து!
நாட்கள் பலவாகிவிட்டது!
உனக்கான காத்திருப்பில்!
நாழிகள் நகர்கிறது!
சில காலமாய்.......!
இப்போதெல்லாம்!
அழைக்காமலேயே!
அடிக்கடி எடுத்துப்பார்க்கிறேன்!
என் கைபேசியை!
உன்னிடமிருந்து!
அழைப்பு வந்துவிட்டதோவென்று!
குறைந்தபட்சம் குறுந்தகவலாவது !
வராதாவென்று...!
மொத்தமாய் மாறிப்போனேன்!
சுத்தமாய் மாற்றிப்போனாய்!
என் வலிகளை அறிய!
நீயில்லை இங்கே!
உன் நிலைமையை தெரிய!
நானில்லை அங்கே!
சகியே!
இது பிரிவா....!
இல்லை இடைவெளியா.....!
பயமாயிருக்கிறது எனக்கு!
உனக்கு........?!
தென்றல்.இரா.சம்பத்!
ஈரோடு-2