தெளிந்த நல்நீரும் காற்றும்!
------------------------------------!
நாகரீகச் சேறு வழுக்கி!
நவீனப் பள்ளத்தாக்கில்!
விழுந்து மரணத்தோடு!
போராடும் மனிதனுக்கு!
அவசரத்தேவை!
தெளிந்த நல்நீரும்!
காற்றும்!
கூவ நீருக்கும்!
குழாய் நீருக்கும்!
தற்சமயம் நிறபேதம்!
மட்டும் தான்!
இனி குடிமட்டுமல்ல!
குடிநீரும் குடியைக்!
கெடுக்கும்!
கந்தகமும்!
கரியமிலமும் காற்றோடு!
கலப்புமணம்!
புரிந்ததால்!
சுத்தக்காற்று!
வார்த்தையில் மட்டும்!
இனி காச நோயினும்!
காற்று நோய்!
கொடியது!
நிக்கோடினால்!
தேய்பிறையான!
நுரையீரலுக்ககும்!
ஒளிச்சேர்க்கைக்கும்!
கூட திறனிழந்த!
இளந்தளிர்களுக்கும்!
அவசியத் தேவை!
தெளிந்த நல்நீரும்!
காற்றும்!
-------------------!
எழுதியது ...!
பள்ளித்தோழன்!
கு.கண்ணன்!
( தீயனைப்புத்துறை காவலர் )
தமிழ் யாளி