துணையின்றித் தனித்தலையும்!
தேசாந்திரித்தனத்துடன்!
காற்றில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறேன்!
என்ன பாரந்தான் நான் என்பதன் புதிர்!
என்னில் அவிழ்ந்து!
சிறகை முளைப்பிக்கிறது தோள்களில்!
சூரியன் அது!
காகமாகிய என் வானத்திலும்!
ஒன்று தெரிகிறது இப்போது!
பறித்த பின் துரத்திவிடப்பட்ட என்!
வயலுக்குள்ளும்!
புத்தகங்களுக்குள்ளும் தனித்து!
பட்டுப் போய் நிற்கின்ற மரத்தின் மீது!
பறந்து போய் நிற்கக் கனவு கண்ட ஓர் பகலில்!
சூரிய நிழலின் கறுப்போடு கறுப்பாக!
காகமாகிய நானும் போய்வரத் தலைப்பட்டேன்.!
ஊரின் எல்லையில் வைத்தே!
என் வாலில் நெருப்புப் பிடித்தது!
எரிவோடும்!
மூலத்திலிருந்து சொட்டத் தொடங்கிய!
ஒழுக்குகளோடும்!
காற்றை இழுத்துப் பிடித்துக் கொண்டபடி!
வெகுதூரம் மிக வெகுதூரம் வந்துவிட்ட நம்பிக்கையுடன்!
திரும்பிப் பார்க்கிறேன்!
உள்ளுர்ப் பத்திரிகையொன்றின்!
பாராட்டுக் கவிதை வரிகள் போல கிடக்கிற!
என்னைப் பார்த்து!
பரிதாபமாய்ச் சிரிக்கிறது காலம்!
ஊரின் எல்லைக்குள் வைத்தே
அசரீரி