பரணிலிருந்து பேசுகிறேன்
சத்தி சக்திதாசன்
பத்திரப் படுத்தி வைத்தே விட்டார்கள்!
பாத்திரம் ! பழைய பாத்திரம் ! என்னை!
பரணின் நடுவே பாதுகாப்பாய் -- ஆம்!
பரணிலிருந்துதான் பேசுகிறேன்!
!
எத்தனை எத்தனை விதமான சமையலை!
எப்படியெல்லாம் என்னுள் ஆக்கி - தீயில்!
எப்போதும் வதக்கி தாம் அறுசுவை கண்டனர்!
எப்படிச் சொல்வேன் ? இப்போது நானும்!
எப்போதும் ஓய்வில் ... பழைய பாத்திரம்!
அம்மா பசிக்குது என்றே ஓடிவரும்!
அத்தனை குழந்தைகளும்!
அடியே ! சமையல் ஆச்சா என்றபடியே!
அதிகாரத்துடன் வரும் கணவனும்!
ஆர்வத்துடன் விழிகளை அலைத்து!
ஆவலாய்த் தேடுவதும் என்னையே!
அப்போது , அறிவீர்களோ.....!
இப்போது நான் பழைய பாத்திரம்!
ஆம் நான்!
பரணிலிருந்துதான் பேசுகிறேன்....!
தீயினால் சுட்டபுண் ஆறவோ என்னை!
நீரினில் தேய்த்துக் கழுவுவது என்றே நான்!
நாட்கள் பல திகைப்பதுண்டு - இன்று!
நாதியற்று பரணின் மேலிருந்து!
நானும் பாடுவது பழைய பல்லவியோ ....!
விருந்தினர் வரும் போதெல்லாம் - அவர்கள்!
வயிறு நிறைக்க பண்டங்கள் படைத்தேன்!
விருந்தினர்கள் இன்றும் வருகிறார்கள்.... ஆனால்!
நானோ .... பரணின் மேல் பழைய பாத்திரமாய்!
அம்மா பசிக்குது ... என்றே ஒரு குரல்!
அழுகையுடன் வாசலில் ஒலிக்கையில்!
அடுக்களைக்குள் நடக்க முடியாமல் நான்!
அவர்கள் நெஞ்சில் கருணை மறந்தே!
அடித்து விரட்டுவர் அப்பிச்சைக்காரனை!
அழுவேன் மனதினுள் ஏனென்றால்!
என் உணர்வுகளுக்கு மட்டும் நடக்கும்!
சக்தியுண்டு என்பதால்!
வசதி படைத்தோர் நண்பர்களாம்!
வயிறு நிறைய இணவு படைப்பார்!
வருந்திக் கொண்டே நான் தீயில்.....!
வேடிக்கை என்ன தெரியுமா? இன்று!
வேண்டாத பொருளாய் பரணிலே நான்!
ஆம் !!
நான் பரணிலிருந்துதான் பேசுகிறேன்!
காதில் மெதுவாகக் கேட்குதோர்!
உரையாடல்!
கண்களில் பார்வை மங்கிய!
அவ்வீட்டின் தந்தையை!
கூட்டிச் செல்கிறார்களாம்!
வயோதிபர் இல்லத்துக்கு!
மனதுக்குள் சிரித்தேன் ....!
ஆம் நான் வாய்விட்டுச்!
சிரிக்க முடியாத பாத்திரம் தானே ...!
ஆனால் ஆண்டன் படைப்பினில்!
அன்பற்ற இவர்களும் பாத்திரங்கள் தான்.....!
தம்மை வாழவைத்த தெய்வத்தை!
தயாராக வயோதிபர் இல்லத்துக்கு!
தடையின்றி அனுப்பும் இம்மனிதர்!
கேவலம்.... பழைய பாத்திரம் எனக்காவா...!
பரிதாபப் படப் போகிறார்கள்....!
ஆமாம்....!
இதுதான் வாழ்க்கை...!
அந்த வய்தானவரும் இனி!
பரணிலிருந்துதான் பேசுவார்...!
காதுகளைக் கூர்மையாக்குங்கள்!
ஏனென்றால் அவரிடமிருந்து கொட்டப்போவது!
அனுபவ முத்துக்கள்!
அறியாதோர் மூடர் அவர்கள் பெயரும்!
மனிதர் தானோ ?!
ஆமாம்!
நான் பரணிலிருந்துதான் பேசுகிறேன்!
!
-சத்தி சக்திதாசன்