யாருக்கும் வெட்கமில்லை - சத்தி சக்திதாசன்

Photo by laura adai on Unsplash

சத்தி சக்திதாசன் !
உண்பதற்கு உணவில்லை !
உடுப்பதற்கு உடையில்லை !
உள்ளத்திலே அன்பில்லை !
உதட்டினிலே உண்மையில்லை - ஆனால் !
யாருக்கும் வெட்கமில்லை !
படுப்பதற்கு பாயில்லை !
பழக ஒரு நண்பனில்லை !
பணத்திற்குப் பாசமில்லை !
பாபத்திற்கும் குறைவில்லை - ஆனால் !
யாருக்கும் வெட்கமில்லை !
தேவைகற்கு அளவில்லை !
தேடல்களில் பொருளில்லை !
தௌ¤வான கொள்கையில்லை !
தெரிந்து கொள்ள ஆசையில்லை - ஆனால் !
யாருக்கும் வெட்கமில்லை !
நீதிக்கு வெற்றியில்லை !
நேர்மைக்கு மதிப்புமில்லை !
நேற்றைகளை பார்ப்பதில்லை !
நாளைகளில் அர்த்தமில்லை - ஆனால் !
யாருக்கும் வெட்கமில்லை !
கண்களில் கருணையில்லை !
கடமைகளில் ஆர்வமில்லை !
காதலிலே தூய்மையில்லை !
கடைசிவரை பொறுமையில்லை - ஆனால் !
யாருக்கும் வெட்கமில்லை !
யாருக்கும் வெட்கமில்லை !
யாவையுமே தனதுமில்லை !
யாரையுமே நம்பவில்லை !
யாருமே உறவுமில்லை - ஆனால் !
யாருக்கும் வெட்கமில்லை
சத்தி சக்திதாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.