‘ரிஸானா’.. சபிப்பு.. முறிவு
நவஜோதி ஜோகரட்னம்
01.!
‘ரிஸானா’!
-----------------!
என்னிதயம் உழுதுகொண்டிருக்கிறது உன்னை....!
கீரிமலையில்!
மாலை போட்ட கிடாயும்;!
வேள்விபோட்ட தலையின் நினைவும்;!
நெஞ்சில் இருக்கிறது இன்னும்..!
தயவில்லா ஒரு!
சிட்டுக்குருவியின் தலையை!
வேள்வி; பார்த்த அதிர்வில்!
அரபுநாட்டில்; கடுங்கசப்பு எனக்கு!
சிலிர்த்தது என்னிதயம்!
சிவப்பாகி சிந்திக்கொண்டிருந்தது கண்கள்...!
ஆ... கொடியவரே என்று!
அத்துமீறி என்னை!
அறையெங்கும் ஒலிக்க வைத்தது...!
மன்னிப்பு இல்லாமல்போன!
ஏழை ரீஸானா...!
மூதூரில் சிறகடித்த பறவையே! ...!
சாவுகள் நிட்சயிக்கப்படுகிறதாம்!
புதுவருடம் தை இரண்டாம்!
புதன்கிழமை!
புது வண்ண உடைக்குள்!
ஓட்டிப் படிகிற உடலுக்கு!
வெள்ளாடை போர்த்தி!
உணர்வுகள் சாக!
அரபு நாட்டின் அந்நிய வாள் உன்னை!
அரிந்து கொண்டதா...?!
ஐயோ என்று...தொலை தூரத்தில் கத்தும்; கோளை நான்...!
பதினேழு வயதில் பயணித்த மாதே...!
வயது பதினேழில்தான்;; எனக்குக் காதல் பெருக்கெடுத்தது..!
அது என் முதல் காதல்...!
துளிர்க்கும் என் சிரிப்பிற்கும்!
என் பெண்மைக்கும்; ஒரு தனி மரியாதை..!
ஆயிரம் கனவுகள் என்னுள்...!
காற்றை அடித்து எழுப்பும் - பால்!
நிலவைத் தொட்டுச் செல்லும் - என்!
குடும்ப இதழ்கள் எழுந்து விரிந்து!
என் உடலைத் தடவிக் கொடுக்கும்!
வயது இருபத்துநாலில்!
காதலில் உருவெடுத்த - என்!
குட்டி மகன் என்னை கட்டி அணைத்தானடி - உன்னை!
அரபு மண் கட்டி அணைத்ததோ!...!
ரிஸானா நீ உம்மா...!
மொட்டாக்குப் போட்ட எந்நாட்டுப்பெண்ணே!
உன் இளமைக் கனவுகள்!
உனக்குள்ளேயே திரும்பியதோ!!
காற்றால் பறவையால் பாடலால் அரபுநாட்டால்!
ரிஸானா நீ எங்கே...?!
உன் கனவுகள் எங்கே?!
உலகம் உன்னைத் தாலாட்டுகிறது ...நீ தூங்கம்மா !
பாசாங்கு இசையோடு;; நீ தூங்கம்மா... இன்னும்!
சிதறும் உணர்வுகளை உணரத் தருவேன்!
மறுபிறப்பு ஒன்று இருந்தால் மட்டும்;....!
18.1.2013 !
!
02.!
சபிப்பு!
------------!
சமரின் ஆயுதங்கள்!
நித்தம்!
எழுப்பும் ஒலி!
ஒரு புறமாய்!
இதயத்துள் வலிக்கிறது...!
ரகசியமாக !
அன்பை எடுக்கவும்!
கொடுக்கவும்!
உரிமை பறிபோகாமல்!
உலகம்!
காதலும் புரிகிறது...!
புன்னகை மலர்ந்து!
கவிதை படைக்க !
மனது துணியும்போது...!
இரு குருவிகளின் காட்சி!
கனத்து!
களைக்கிறது நரம்பு!
வார்த்தைகளை மீறுகின்றது!
துயரம்...!
காதோர அந்தரங்கம் !
சுமையாகி உறைகிறது...!
கிளையில் ஊசலாடும்!
குருவிகள் இரண்டை!
ஊரெல்லாம் திரண்டு!
குறுனிகளாய் நின்று!
வியக்கின்ற காட்சி!
மன விருட்சத்தை!
சரித்து உறுமுகின்றது...!
நுண்ணறிவின் வேகம்!
உயரும் வயது...!
உடலும் உளமும்!
உடற்சுரப்பியும்!
பாற்சுரப்பியும்!
குருதியில் கலக்கின்ற பருவக் குருவிகள்!
கற்பனையை வளர்த்து!
கவர்ச்சியால் அலங்கரிக்கும்!
அழகான குருவிகளை !
கன்னம் வருடி!
கசக்கிக் குதறி!
கழுத்தை நெரித்து!
தலித்தென்று!
தொங்கவிட்டுச் சிரிப்பவர்களை இந்நிலத்தின்!
கொடுங்கோலரென!
சித்தரிக்கின்றது..... இல்லை!
சபிக்கின்றது மனம்....!
22.6.2014!
03.!
முறிவு!
--------------!
நகர்தலின் குறியீடாக!
பயணத்தைப் பார்க்கிறேன் !
மனதளவிலும் !
எண்ண அளவிலும் !
உயர்தலும் ஒரு நகர்வுதான்!
வாழ்க்கைப் பயணத்தில்மனம்!
மிக இயல்பாகவே !
விரிவு கொண்டு நகர்ந்துவிடுகிறது!
பயணங்களில் சந்தித்த !
மனிதர்களின் முகங்களும்!
அழகான காட்சிகளும்!
அழியாத சித்திரங்களாகின்றன!
பயணங்கள்!
மனிதர்களின் முகங்களை மாற்றுகின்றன!
பயணம் சில வேளை !
அரட்டையும்!
சிரிப்புமாகவும் கூட!
மாறுவதைப் பார்க்கிறேன்!
புதிய முகம்!
புதிய உணர்வு!
புதிய ஊக்கம் !
எல்லாமே என் பயணத்தின் மகிமை!
பயணம் எங்கு கிளம்பி !
எங்கு முடியும் என்று !
என் ஜீவிய தோட்டத்தில் தேடும்போது!
உதிரும் உன் நினைவுகளால் - அவை!
முறிந்து போகின்றன......!
!
29.8.2013