வ.ந.கிரிதரன் -!
!
யானை பார்த்துப் பெருமிதமுறும்!
குருடரிவர்.!
காலைப் பார்த்துரலென்பார்..!
காதைப் பார்த்துச்சுளகென்பார்.!
முழுவுரு அறிதற்கு!
முயலார். ஆயின்!
முற்றுந் தெரிந்ததாய்!
முரசறைவார்.!
சொல்லின் பொருளறியார்.!
ஆயின் சொல்லழகில்!
சொக்கி நிற்பார்.!
'இஸம்' பல பகர்வாராயின்!
'இஸம்' புரியார்.!
குழுச் சேர்த்துக்!
குளிர் காய்வார்.!
இருப்போ தற்செயல்.!
தற்செயலுக்குள்!
இவர்தம்!
தற்செயற் தந்திரம் தான்!
என்னே!!
நிலையற்றதனுள்!
நிலைப்பதற்காயிவர்!
போடும் ஆட்டம் தான்!
என்னே!!
புரிந்து கொள்ளப்!
படிக்கார்.!
அறிந்து கொள்ளப்!
படிக்கார்.!
புலமை பகிர்வதற்கன்றிப்!
பகர்வதற்காய்ப்!
படிப்பார்.!
ஆனை பார்க்கும் அந்தகரே!!
தனியறிவை!
இணைத்தறிய என்றுதான்!
முயல்வீர்?
வ.ந.கிரிதரன்