அலுவலகப் பணிநிமித்தம்!
அயல் நாட்டுப் பயணமொன்றில்!
வண்டியோட்டி ஒருவனிடம்!
வழக்கப்படி கேள்விகள்!
கேட்டபடி மேற்கொண்ட!
கார் பயணமொன்றில்!
இடம் பற்றிய கேள்விக்கு!
இலங்கை என்றவன்!
இப்போதைய நிலை அங்கு!
இன்று வரை நலம் என்றான்.!
மீதிப் பயணம் முழுதும்!
முற்றிலும் ஒரு ம(யா)ன அமைதியில்.!
மற்றொரு!
பயணமொன்றில்!
அத்தனைப் பாடல்களும்!
அச்சு அசல் தமிழாய்!
ஒலிக்க விட்ட!
ஒரு மலையாளி ஓட்டுனர்!
பதிலாய் என் கேள்விக்கு!
பாஸ் எல்லாம் தமிலல்லோ என்றான். !
வாழும் நிலைகளில்!
உயிர்வதை சுமந்தொரு வாழ்வும்.!
உயிர் வாழ சார்ந்தொரு வாழ்வும்
செல்வராஜ் ஜெகதீசன் - அபுதாபி