தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நினைவில் விரியும் கிளைகள்

அ. விஜயபாரதி
வேலிக்கருவை மர இலைகளும்!
கருவேல மரப் பூக்களும்!
கீரைப் பொரியலாய்!
கொட்டாங்குச்சியில்!
மணத்துக் கொண்டிருக்கும்!
இளம்பிராயத்தில் எழுப்பிய!
மணல் வீட்டுக்குள்!
எப்போதாவது!
கோயில் ஆலமரத்தில்!
குடியேறும்!
வழிதவறிய குரங்கிற்கு!
மிளகாய்ப் பொடி தூவிய!
வாழைப்பழத்தோடு!
காசுக்கு வாங்கிய நாவல் பழங்களைத்!
தின்றத் கொடுத்து!
அதன் மலத்தில் நெளியும்!
புழுக்களில் உணர்ந்தோம்!
கீரிப்பூச்சிகளின் நச்சரிப்பை!
வாகை மரங்களுக்குத்!
தலைகால்!
புரிவதில்லை போலும்!
பூக்களையே!
குஞ்சங்களாய் சூடியிருந்தவை!
இலையுதிர்த்து விட்டு!
காற்றின் நட்டுவத்திற்கு!
ஜதி செய்து கொண்டிருக்கிறது!
தலையில் சலங்கையணிந்தபடி!
ஆண்டாண்டு காலமாய்!
நிழற்கிளை விரித்து!
இனிக்கும் பழங்களை உலுக்கிய!
பாதையோரப் புளியமரத்தை!
வெட்டிய பள்ளத்தில்!
மழைநீர் தேங்கும்!
கோடையில்!
வெயில் வேரூன்றி!
வெக்கை பரப்பி நிற்கும்!
புங்கமரம்!
பூத்துக் குலுங்கியதால்!
உதிர்ந்த மொட்டுக்களை!
ஆட்காட்டி விரலசைத்து!
நட்சத்திரமெண்ணுவது போல!
ஒன்றிலிருந்தே மீண்டும் மீண்டும்!
தொடங்குகிறேன்!
ஒரு பகல்கனாவில்!
மல்லாந்து படுத்தபடி!
நிழலில் மட்டும்!
கசப்பை இறக்கி வைக்காத!
வேப்பமரக் கிளைதனில் !
நித்தம் நண்பகல் வந்தமரும்!
இரு மைனாக்கள்!
உடல் சிலிர்ந்து இறகு கோதி!
ஒருவித லயத்தில் சப்தித்தவை!
இன்றெந்தன் சாளரத்தில்!
வாசம் பண்ணவில்லை!
சாரல் கதவாயிருக்கிறது!
அணிலின் நகங்களும்!
காற்றின் விரல்களும்!
கொய்து தரையிலிறைத்த !
மஞ்சள் கொன்றைகளைப்!
பார்க்கும் கணம்!
எவளொருத்தியின் நினைவில்!
விளக்கமாறு வரவில்லையோ!
அவளுடன் நான்!
தண்டவாளங்கள் சந்திக்கும்!
மாயப்புள்ளியில்!
தாயம் ஆடிக் கொண்டிருப்பேன்!
அ. விஜயபாரதி

நவீன துச்சாதனனும் நாயான யூதாஸும்

அஸ்மின், ஈழநிலா, இலங்கை
கவிஞர் ஈழநிலா !
பாலாறு தேனாறு ஓடிநின்ற பூமி!!
படுபாவிகளி களினாலே அழியுதடா சாமி!!
யாழ்தன்னைப் பந்தாடத் துடிக்குதடா ‘ஆமி’! !
யாரென்று உனைக்காட்ட ‘துவக்கெடுத்து’ காமி!!
நாள்தோறும் நல்லவரை ‘கொட்டி’யென் றடைப்பார்!
நடுறோட்டில் அவர்பின்னே பிணமாக கிடைப்பார்!!
காலாற நடந்தாலே காணமல் போவோம்!!
கண்ணிவெடி ‘கிளைமோரில்’ கால்பறந்து சாவோம்!!
கோளாறு கொண்டோரை கொன்றன்று வென்றோம்!!
கோடாலிக் காம்புகளால் பின்வாங்கிச் சென்றோம்!!
ஏழாறு நாள்போதும் மீண்டுமதை வெல்வோம்!!
எமன்வந்து தடுத்தாலும் அவனையுமே கொல்வோம்!!
பாவிகளின் இடுப்பொடிக்க ஒருபோதும் அஞ்சோம்!!
புல்லிளித்து ஈழம்தா என்றும்நாம் கெஞ்சோம்!!
ஆவிபறி போனாலும் மீண்டும்நாம் பிறப்போம்!
அடிவருடி களையொழிக்க உயிருறவை துறப்போம்!!
எம்மவனே எமையழிக்க யூதாஸாய் போனான்!!
எச்சிலைக்காய் வாலாட்டும் நாய்போன்றே ஆனான்!!
அம்மாவின் சேலையினை ‘துச்சாதன்’ உரித்தான்!!
ஆஹாகா! மேலுமுரி எனப்பிள்ளை சிரித்தான்!!
ஐவிரலும் ஒன்றல்ல! அவன்பிள்ளை யல்ல!!
ஐயையோ என்றலர்வான் எதிரிகளே கொல்ல!!
பொய்யுலர பூமலரும் போரொருநாள் ஓயும்!!
பொறுதமிழா! உன்வாழ்வில் இன்பத்தேன் பாயும்

திக்கெட்டும் ஒலிக்கட்டும் தமிழன்னையின் திருப்புகழ்

ப.மதியழகன்
அந்நிய மொழியின் ஆக்கிரமிப்புகளையும்!
ஆங்கில மொழி நிகழ்த்திய!
ஆழிப்பேரலைத் தாக்குதலால் உண்டான!
நிலைகுலைந்த தன்மையையும்!
அஞ்சாமல் எதிர்கொண்டு!
மலைபோன்ற நெஞ்சுறுதியுடனும்!
எல்லையிலாப் பொறுமையுடனும்!
பேரிடி, பெருமழை வெள்ளம் தாங்கி!
வைராக்கியம் கொண்டவளாய்!
நிமிர்ந்து நின்றாள் எங்கள் தமிழன்னை !
‘பேரிலக்கியச் சபைகளி்ல்!
தலை கவிழ்ந்து நிற்கும் நிலையை!
தமிழ்ச்சான்றோர் தருவதில்லை!
எக்காலத்திலும் தமக்கு!
வரகவிகள் தமிழ்வயலில்!
விளையாமல் போக!
தமிழ்மொழியொன்றும் தரிசு!
நிலமல்ல இது உறுதி’- என !
பெருமிதம் பொங்கச் சொல்லி!
சிரசில் மணிமகுடமும்,!
கழுத்ததில் மணிமாலையும் சூடி!
கம்பீர தோற்றம் கொண்டவளாய்!
பாரெங்கும் ரதத்தினிலே பவனி வந்தாள்!
எங்கள் தமிழன்னை !
பிரளத்தில் நகரம்தான்!
கடலுக்குள் மூழ்கும்!
தமிழ்க்கடலின் எழுச்சியினால்!
ஏழு கண்டங்களும்!
அதனிடத்தில் சிறைபட்டுப் போகும் !
கம்பன் இயற்றிய ‘கவி’ மாலையும்!
பாரதி பாடிய ‘பா’ மாலையும்!
வள்ளுவன் வடித்த ‘குறள்’ மாலையும்!
இயம்பிடுமே உலகுக்கு!
இயற்றமிழின் சிறப்பு!
இன்னதென்று!
சர்க்கரைப் பாகும், தேனும்!
அதனதன் இயல்பினில் ஒன்றாகுமா?!
சர்க்கரை உடலுக்கு கேடு!
தேன் உயிர்காக்கும் அருமருந்து!
தமிழ்த்தேனை அள்ளிப் பருகிடுவோம்!
அதன் இனிமையால் நல்வளம் பெருகி!
இல்லறம் சிறக்க!
இன்புற்று வாழ்வாங்கு வாழ்ந்திடுவோம்! !

ஞாயிற்றுக்கிழமை

சூர்யா கண்ணன்
இருக்கிற பாத்திரம்!
எல்லாத்துலயும் தண்ணீர்!
புடுச்சு வெக்கிற கவலை!
அம்மாவுக்கு..,!
இரண்டு நாளுல !
முடுஞ்சுபோகும் மருந்து!
இந்தமுறை யாரிட்ட கேக்க?!
யோசன அப்பாவுக்கு..,!
யாருக்கு என்னவானா!
எனக்கென்னன்னு!
அக்கா குழந்தை!
பால் டம்ளரை தட்டிவிட,!
துடைக்க உதறின!
அப்பாவின் துண்டு!
மருந்து புட்டியை சாய்க்க,!
குடத்தோட வந்த அம்மா!
விழப்போன குழந்தையை பிடிக்க,!
பால், மருந்து, தண்ணீர்!
கலவை!!
கவலை!!
யாருக்கு என்னவானா!
எம்மயிறுக்கு என்னன்னு!
அவசரமாய் வெளிக்கிளம்பினேன்!
இன்று ஞாயிற்றுக்கிழமை!
‘மப்’ அடிக்கணும்.!
-சூர்யா கண்ணன்!
குன்னூர்

பிரியமானவளே.. காதல்

கலாநிதி தனபாலன்
01.!
பிரியமானவளே!
பிரியமானவளே நீ எல்லாவற்றிலும்!
உயர்ந்து உள்ளத்திற்குள்ளே!
ஊடுருவி உவகையோடிரு!
மாறாய் மனதை மறைத்து!
உண்மையை உதறித்தள்ளிவிட்டு!
உடைந்த உள்ளத்தோடோடி!
உன்னவனையும் உடைத்துவிடாதே!
உள்ளே உவகையோடிரு!
!
02.!
காதல் !
காதல் !
உணர்வின் ஒரு பெயரல்ல !
மானுடத்தின் மறுபெயர் !
காதல் !
உலகில் ஆழமானது !
அழகானது அந்த ஒற்றைச்சொல்! !
காதல் !
மனமெல்லாம் மழையாகப்பொழிந்து !
மல்லிகையாய் மலருகின்ற அந்த !
மெல்லினிய உணர்வு !
காதல் !
கொடுத்து வாங்குவதல்ல !
அழகாய் பரிமாறிக்கொள்வது !
காதல் !
பரிமாறும் பாச உணர்வு !
பரிமாறும் பாச உணர்வை !
அவர் சொல்லிவிட்டார் !
இவர் சொல்லிவிட்டாரென்று !
இழந்து விடுவதற்கில்லை !
காதல் !
இது ஒன்றுதான் !
இதயத்தால் முழுமையாய் !
வெளிப்படுத்தக்கூடிய !
ஒரு உயிரின் உன்னத உணர்வு !
!
-கலாநிதி தனபாலன்

அன்பு

மதிரஞ்சனி
கவி: மதிரஞ்சனி!
மனது இரும்போடு உறவு வைக்கும்போது!
அன்பு இறந்து விடுகிறது!
உன்னை ஞாபகப்படுத்த வேண்டுமா?!
உன் மனசோடு நீ பேசு அது!
சிறகில்லாத பறவை என்றால்!
திசைமாறிப் போவாய்.!
சிறகு கொடு தேவையான மட்டும்!
விரித்து பற மனதை!
கிழித்துப் போடும் சக்தி!
திருப்தி இல்லை தான் - அதை!
இயக்குகின்ற சக்தியும் திருப்தி இல்லை தான்!
திருப்தியை மனசு திருப்பிக்!
கொள்ளும் போது நீ!
தித்திக்கிறாயா!...!
கவி: மதிரஞ்சனி

என்னை விட்டு பிரிந்து நீ

ரா.கிரிஷ்
பூக்கும் மலர்களில் எல்லாம் !
நீ புன்னகையாய் இருக்கிறாய்! !
வீசும் காற்றில் எல்லாம் !
நீ வாசமாய் இருக்கிறாய்! !
கார்கால வானத்தில் !
நீ வானவில்லாய் தெரிகிறாய்! !
பனி விழும் காலம் வந்தால் !
நீ பனித்துளியாய் மிளிர்கிறாய்! !
அஸ்தமன சூரியனின் ஒளியாய் !
நீ என்னை கவர்கிறாய்! !
என்னை விட்டு பிரிந்தும் !
நீ - என்னில் வாழ்கிறாய். !
ரா.கிரிஷ்

வீடு

வேதா. இலங்காதிலகம்
கூடி நாங்கள் வாழும் வீடு !
மாடி வீடு எங்கள் வீடு !
ஆடி ஓடி ஏறும் வீடு !
நான்கு மாடி வீடு இது. !
அப்பா அம்மா தங்கையுடன் !
அழகாய் கூடும் வீடு இது !
அன்பு பாசம் கூட்டி வைத்து !
ஆசை பெருக்கும் வீடு இது. !
வாடகை வீடு - நான் வசிப்பது !
வளமாய் நன்கு நான் படித்து !
வசதி பெருக்கிப் பணம் சேர்த்து !
வாங்குவேன் ஒரு புது வீடு

நான் வெளியேறுகையில்

இஸுரு சாமர சோமவீர
நான் வெளியேறுகையில்!
என்னைத் தொடர்ந்து!
புன்னகைத்தபடி!
வருவதில்லை நீ வாசல்வரை!
முன்பு போல!
கட்டிலிலே சாய்ந்து!
என்னையும் தாண்டி!
கதவினூடாகப் பார்த்திருக்கிறாய்!
தொலைதூரத்தை!
அமைதியாக!
பறக்கிறது பட்டம்!
மிகத் தொலைவான உயரத்தில்!
நூலிருக்கும் வரை!
தெரியும் உனக்கும்!
என்னை விடவும் நன்றாக

எல்லாமே இயல்பாயுள்ளன

துவாரகன்
எல்லாமே மிக இயல்பாய் உள்ளன.!
எதை வேண்டுமானாலும் !
தெரிவுசெய்யலாம்.!
தெரிவு மட்டும் எனதாய் உள்ளது.!
இன்று இருப்பதும் !
நாளை இருப்பதைத் தீர்மானிப்பதும் !
மிக எளிதாயிருக்கிறது.!
சாப்பிடுவது !
நடந்து செல்வது !
ஆட்களைப் பார்க்கும்போது!
எந்தச் சலனமுமில்லாது !
ஒரு விளையாட்டுப் பொம்மைபோல் !
பார்த்துக் கொண்டேயிருப்பது !
எல்லோரும் சிரித்து ஓய்ந்தபின் !
ஒப்புக்காக !
சிறு உதட்டுப் புன்னகையை !
காட்டிவிட்டுப் போவது!
எல்லாமே இயல்பாயுள்ளன. !
ஒரு கூரான கத்தியோ !
ஒரு நீளக் கயிற்றுத் துண்டோ!
ஒரு கிணறோ !
எனது தெரிவுக்கு மிகப் பொருத்தமானது.!
இறைச்சிக்காக கழுத்து இறுக்கப்பட்டு!
கதியாலில் தொங்கவிடப்பட்ட!
ஒரு கோழியின் !
செட்டையடிப்பின் பின்னான !
அமைதியும்… !
கூடவே கிடைத்துவிடும். !
எல்லாமே மிக இயல்பாய் உள்ளன.!
நான் எதை வேண்டுமானாலும் !
தெரிவுசெய்யலாம்.!
தெரிவு மட்டும் எனதாய் உள்ளது.!
!
-துவாரகன்