திறக்கும் உடல்..மௌனம்.. முதல் காதல் - ப . ஜெயபால்

Photo by FLY:D on Unsplash

திறக்கும் உடல்!
01.!
---------------------!
என் உடலை!
படிக்கும் பொழுது!
நிசியில்!
கனவு எழுதும் விடை!
கடவுளாக, மானிடனாக, பிணமாக!
சில பக்கங்களை நிரப்பிக்கொள்ள!
சில பக்கங்கள்!
ஆடை இழந்தும்!
சில பக்கங்கள்!
புணர்ச்சிக்குள்ளாகியும்!
சில பக்கங்கள்!
ஓட முடியாமல்!
களைப்படைந்தும் போகின்றன!
மரத்தினைச் சுற்றித்திறியும் !
பித்தனாகவும்!
நடைபாதையில் தர்க்கமிட்டுத்திறியும்!
தத்துவனாகவும்!
சில காட்சிகள் அகப்படுகின்றன!
சம்மந்தமற்ற!
சில பக்கங்கள்!
இடைச்செருகலாகிப்போக!
பேய்களின் வயற்றுப்பசிக்கு!
இரையாகிப்போன!
சில பக்கங்களையும் காணமுடிந்தது!
ஒவ்வொரு நாள் இரவும்!
படிக்கப்படும் கடைசிப்பக்கம்!
முடிவற்று நிற்கிறது..!
களைப்படைந்து கண்கள்!
விழிக்கும் தருணங்களில்!
உடல் மூடிக்கொள்கிறது..!
மறுநாள் திறக்கப்படும் உடல்!
என்னவாக இருக்கும்...!
02.!
மௌனம்!
-----------------!
இந்த நிமிடம்!
அவன் மௌனித்ததற்கு...!
அவனை விட்டுச் சென்ற!
காதலை நினைத்திருக்கலாம்!
நீண்ட நாட்களுக்கு முன் கூறிய!
ஒரு பொய்யை நினைகூட்டியிருக்கலாம்!
பிரிந்து வந்த வீட்டை!
நினைவுப்படுத்தியிருக்கலாம்!
பழைய நண்பரை..!
கோபத்தை..!
பாவத்தை..!
பழிச் சொல்லை..!
சபலத்தை..!
வலியை..!
வேதனையை..!
ஏன் வெறுமனேகூட!
மௌனித்திருக்கலாம்..!
அவன் மௌனம்!
ஏதோ ஒன்றினால்!
இப்பொழுது நிரம்பிக்கொண்டிருகின்றது...!
!
03.!
முதல் காதல்!
-----------------!
உதிரும் மலர்!
உதிரும் பனித்துளி!
உதிரும் சிரிப்பு!
உதிரும் பேச்சு!
உதிரும் வெட்கம்!
உதிரும் பார்வை!
உதிரும் மௌனம்!
இவைகளில் முளைத்துவிடுகிறது!
காதல்
ப . ஜெயபால்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.