காதலித்துப் பார் !!
-ரா. சொர்ண குமார்.!
காதலித்துப் பார்!!
உடலுக்கு மட்டுமில்லை!
உயிருக்கும் வலியுண்டு!
என்று உணர வேண்டுமா?!
காதலித்துப் பார்!!
உறக்கமின்றி நீயென்றும்!
தவிக்க வேண்டுமா?!
உணவைக்கூட!
உதாசினப் படுத்த வேண்டுமா?!
காதலித்துப் பார்!!
எண்ணங்கள் எப்போதும்!
சிதற வேண்டுமா?!
எடுக்கின்ற காரியங்கள்!
மடிய வேண்டுமா?!
காதலித்துப் பார்!!
கண்ணீரை கருவாக்கி!
உதிரத்தை மையாக்கி!
கவியெழுத வேண்டுமா?!
உனக்குள்ளே உருகிக்கொண்டே!
உன் பெயரை மறந்து கொண்டே!
எவளோ ஒருத்திக்குள்!
உறைய வேண்டுமா?!
காதலித்துப் பார்!!
பொன்னான பொழுதெல்லாம்!
வீணாகவும்...!
புகைவிட்டு புகைவிட்டு!
இதயம் புண்ணாகவும்...!
காதலித்துப் பார்!!
முகத்தின் மேல்!
முட்காடு வளர்க்க வேண்டுமா?!
குடித்து குடித்து!
குடும்பத்தை மறக்க வேண்டுமா?!
காதலித்துப் பார்!!
கடவுள் மேல் நம்பிக்கை!
இழக்க வேண்டுமா?!
கலியுகமே கவலையென்று!
தோன்ற வேண்டுமா?!
காதலித்துப் பார்!!
பழகிய பந்தமெல்லாம்!
பகையாகும்!!
நெருங்கிய சொந்தமெல்லம்!
நெருப்பாகும்!!
காதலித்துப் பார்!!
மழை பெய்தால்,!
'வானம் யாரை காதலித்தது ?!
ஏன் அழுகிறது ?' -என்பாய்!!
அலையடித்தால்,!
யாரைத்தேடி கடல்!
அலைகிறது என்பாய்!!
காதலித்துப் பார்!!
இன்பம் மட்டுமே!
இதுவரை கண்டாயா ?!
துன்பம் காண!
துடிப்புடன் உள்ளாயா?!
காதலித்துப் பார்!!
தற்கொலை செய்ய ஆசையா ?!
கைவிட்டு விடு !!
காதலித்துப் பார்!!
இரண்டும் ஒன்றுதான்

ரா. சொர்ண குமார்