தசைரோபோ! - கிண்ணியா பாயிஸா அலி

Photo by Maria Lupan on Unsplash

ஐயிரு பௌர்ணமிகள்!
நான்விளைந்த!
பையநான்!
வளர சோகசுயம் மறைத்த!
அமாவாசை!
உதிரமதைப்!
பாலாக்கி தரும்!
உன்னதப்பொறி!
பிஞ்சுக் கணமதிலென்!
சின்ன உறுப்புகளைத்!
தன் விரலால் செதிக்கிய சிற்பி!
வையமிதில்!
கற்கைகள் பல தொடர!
கதிர் தெளித்த ஞாயிறு!
சேயென்னுயர்வின்!
கூனிகளை மாய்க்கச்சீறிய!
சுனாமி!
தன் நினைவகமதில்!
தன்னலம் மட்டும் பதியமறந்த!
தசைரோபோ!
காப்பும் பரிவும்!
பாதமதில் சுவனமுஞ் சுமந்த!
சுமைதாங்கி!
தன்னால் தொடமுடியாது போன!
சிகரங்களுக்காய்!
எனக்குள் ஏணிகள் வளர்த்த விவசாயி!
தான் பறக்க நினைத்த!
வானத்திற்காய்!
எனக்குள் சிறகுகள்!
வரைந்த தூரிகை!
இல்லம் அலுவல் இரண்டிலுமேயென்!
சின்னச்சின்ன் இடர்களைளயும்!
இதமாய் களையும் நேர்த்திமிக்க நிர்வாகி!
பரிவினாசானாயாய்!
பாரினில் பவனி வரும்!
அன்பின் அகராதி.ஷஷஷ!
கிண்ணியா பாயிஸா அலி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.