அங்கீகாரம் - யோகபிரபா, புதுச்சேரி

Photo by Sajad Nori on Unsplash

கனவுகண்டே கழித்த காலங்களும் உண்டு!
இப்பொழுதெல்லாம்!
பொழுதுகளை நான் கழிப்பதேயில்லை.!
இறந்த என் கனவுகளை !
தோண்டி எடுக்கவோ!
கனவுகளைக் காணவோ!
எனக்கு நேரமிருப்பதில்லை!
ஆசை ஆசையாய் !
படித்த தமிழ் இலக்கியங்களை!
மறுவாசிப்பு செய்யவோ,!
என் அறிவினை எதிர்கால இந்தியாவோடு !
பகிர்ந்துகொள்ளவோ!
எனக்கு நேரமிருப்பதில்லை.!
தமிழுக்குக் குரல்கொடுப்பேன் !
என்ற போராட்ட வசனங்களையெல்லாம்!
இன்று உச்சரிக்கவும் !
மறந்துவிடுகிறேன்.....!
அட்டவணை வாழ்க்கையில் !
இயந்திரமாகிவிட்டேன்!
ரேஷன் கார்டில் !
குடும்பத் தலைவியான பிறகு. !
- யோகபிரபா!
புதுச்சேரி
யோகபிரபா, புதுச்சேரி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.