தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

பட வீட்டின் தனிமை

சல்மா
சுவா¤ல் தொங்கும் !
வரைபட மர நிழலும் !
ஒற்றைக் குடிசையும் !
கொஞ்சம் பூக்களும் !
ஒரு வானமும். !
கண்கள் பூக்கள் மீதிருக்க !
மனம் தேடிப் போகிறது !
வரைபட வீட்டின் !
தனிமையை !
-சல்மா !
நன்றி: !
’ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ கவிதைத்தொகுப்பு !
காலச்சுவடு பதிப்பகம்

அரூபங்களின் தரிசனம்

அன்பாதவன்
இயலாதென்னால் அரூபமாய் உணர்வதை!
படைப்பாக்கும் உயர்கலை!
உன்னிலிருந்து எழும் தீயில் ஓவியம் தீட்ட!
கிடைக்குமோ தூரிகை!
மூச்சுக்காற்றின் ஆரோகண அவரோகணங்களை!
கொஞ்சல் சிணுங்கல்களை!
கொலுசொலியின் லயங்களை!
இசைக்கோர்வை அமைக்க!
இல்லையடியெனக்கு இசைஞானம்!
விரல்கோத கலைந்தாடும் கூந்தலிழை நடனத்துக்கு!
படிமங்கள் தேடுகிறேன்!
முத்தம் பதித்த இதழ்களின் ஈரவடிவம்!
எதன் குறியீடென்று!
ஆராய்கிறேன் தனிமைகளில்!
மடிசாய்ந்து கிறங்கிய விழிகளைப் படம்பிடிக்க!
ஒளிக்கருவி உருவாகவேண்டுமினித்தான்!
இதழ்கவ்வும் தருணங்களில் கசியும்!
கேவல் விம்மல்களுக்கு!
இசையாகும் வாய்ப்புமுண்டு!
சாத்தியம்தான் இவையனைத்துங்கூட!
விடைபெறும்போது வெளியிடும்!
ஆழ்ந்த பெருமூச்சு சுமந்த!
கனத்த மவுனத்தை மொழிபெயர்க்க!
திரிந்தலைகிறேன்!
உலக மொழிகளின் காடுகளில்!
!
000000

குடி முழுகிப்போச்சு

அ. முகம்மது மீரான்
அக்கம் பக்கம் வாங்கியத தீர்க்கல!
அடகுக் கடையில் வச்சதயும் திருப்பல!
சொத்து பத்து இருந்ததெல்லாம் இப்பயில்ல!
சொந்தங்கொள்ள காணி நிலங்கூட இல்ல!
சொந்தபந்தம் இருக்குறாங்க தூரத்தில!
சொல்லிக்கிட பக்கத்தில யாருமில்ல!
அஞ்சு பத்து வச்சிருந்த காசையும்!
அடிச்சு வாங்கி புடுங்கி போன புருஷனோ!
எக்கச்சக்கம் குடிச்சதால போதையில!
எழுந்திருக்க முடியாம வீதியில!
கொஞ்சநஞ்சம் மிஞ்சிருந்த உசுரு கூட!
குடி கொள்ள முடியாம முடிஞ்சு போக!
அங்கயிங்க அலஞ்சி திரிஞ்சி அழுதழுது வாங்கி வந்த பணத்துல!
மிச்சமீதி சடங்குக்கொண்ணும் குறையில்ல!
மிஞ்சியிருந்த அரிசி கூட புருசன் வாயில

என் சிறகுகள்

மாதுமை
பிரளயங்களின் நடுக்கங்களுடன்!
என் சிறகுகள் விரிந்திருக்கக்கூடும்!
இன்னும் ஈரம் சொட்டுகின்ற!
மழைக்காயங்களுடன்!
நனைந்தபடி இருக்கின்றன.!
பறக்க எத்தனிக்கையில்!
சொல்லியும் கேட்காத!
தவிர்த்தாலும் விளங்காத!
கட்டற்ற வேகத்தில்!
முடிந்திருந்தது கலவி ஒன்று..!
களவாடப்பட்ட நிர்வாணத்தில்!
ஆக்கிரமிக்கப்பட்ட அணைப்பில்!
அறையப்பட்ட நேசத்தில்!
சிறகுகள் எம்பித்தணிகின்றன!
முயற்சிகளின் சோர்வில்லாமல்.!
!
ஆக்கம்:

யார் வாழ்வில் எண்டாலும்

பூரணி
அன்புக்கு அம்மாவாய்!
பசுவாய்.!
பொறுமைக்கு பூமியாய்.!
அறிவுரைக்கு ஆசானாய்!
தோழமைக்கு தந்தையாய்!
தோழனாய்.!
வாய்மைக்கு அரிச்சந்திரனாய்!
மென்மைக்கு பூவாய்!
சிரிப்பிற்கு மோனாலிசாவாய்!
நிழலுக்கு ஆலமரமாய்!
சாய்ந்து நிற்பதற்கு தூணாய்!
பிறர் சீண்டும் போது சுட்டெரிக்கும்!
சூரியனாய்.!
கவிக்கு பாரதியாய்!
பேச்சுக்கு புலவனாய்!
பிடிவாததிற்கு குழந்தையாய்!
கண்டிப்புக்கு அண்ணாவாய்!
தம்பியாய்.!
கண்ணீர் விடும் போது!
அணைக்கும் தோழியாய்.!
சேவைக்கு அன்னை!
தெரேசாவாய்.!
கொடைக்கு பாரியாய்!
அழகுக்கு மயிலாய் இல்லை !
குயிலாய்.!
சுறு சுறுப்பிற்கு எறும்பாய்!
சமாதானத்துக்கு புறாவாய்!
இன்று போல் என்றும் மது!
அருந்தாத தேனியாய்!
மழை நீரை மட்டுமே குடித்து!
வாழும் சக்கரவாக பறவையாய்.!
அடுத்தவர் துயர் கண்டால்!
சாம்பல் மேட்டில் இருந்து!
வரும் பீனிக்ஸ் பறவையாய்!
இல்லை எனில் என்றும்!
பௌர்ணமி நிலவாய்.!
காதலுக்கு இராமனாய் வேணாம்!
சாஜகானாய் வேணாம்...!
சக புரிந்துணர்வுள்ள மனிதனாய்!
மட்டும் இருந்து விடு!
அது போதும் எனக்கு இப்பிறப்பில்

மரணத்தின் வாயிலில்

கலியுகன்
கந்தகத் துகள்களின் மணம்!
இன்னமும் மணக்கிறது!
என் சேதசத்தில்!!
அந்த நாட்களின் ரணங்கள்!
இன்னமும் இருக்கிறது!
உறவுகளைத் தொலைத்துவிட்டு!
மரணத்தின் வாயிலில்…!
எம் வாழ்தலின் முடிவுக்கான!
நிமிடங்களை எண்ணிய !
கணப்பொழுதுகள்!
முள்ளாய்த் தைக்கிறது!
குருதிகளும் தசைகளும் !
குவிந்த தெருக்களில்!
ஜடங்களாய் அலைந்த!
பொழுதுகள் கனக்கிறது!
வெற்றிவிழாக் காணும்!
என் தேசமே…!
நீ எப்போ என் !
சிறைக் கம்பிகளுக்கு!
விடுதலையளிக்கப் போகிறாய்

ஆட்டோகிராப்(நினைவோலை)

தென்றல்.இரா.சம்பத்
இனியவனே...!
ஆசையோடுதானிருந்தேன்!
என் நேசத்தைச்சொல்ல!
எனக்குள்ளே உலாவரும்!
உன் நினைவுகளைச் சொல்ல!
இப்போது எல்லாமே!
அடங்கிப்போனதடா!
இந்த காகிதக்குவியலை!
என்னிடம் நீட்டி!
கையெழுத்து!
கேட்ட கணத்தில்....!
இனியவனே!
உனக்காக-என்!
எழுதுகோல் தேம்பலோடு!!
இனியவனே!
கண்ணீர்தான்!
இதுகூட கண்ணீர்தான்!!
நிறமென்னவோ கருமைதான்!
நினைவென்னவோ பசுமைதான்!
நம் நினைவென்னவோ பசுமைதான்!!
எந்த சலனமுமின்றி!
எழுதுவென!
ஏடு கொடுத்திட்டு!
என் புலம்பலைப் பார்த்து!
பூரிக்காமல்-ஏனடா!
புகுந்து கிடக்கிறாய்!
உன் அறைக்குள்ளேயே...!
காலங்களே தருகின்றன....!
காலங்களே பறிக்கின்றன....!
இது கண்ணதாசரின் வரி!
நானே !
அதற்கு வடிவமாகிவிட்டேனடா...!!
எழுதத்தெரியாமல்!
இந்த ஏழை எழுதுகிறாள்!
எல்லாமும் சொல்ல எண்ணுகிறாள்!
என்பதனை!
எடைபோட்டதா உன் மனம்..!!
இனியவனே....!
பந்தங்கள் எத்தனையோ!
பந்தயக்குதிரையாய்!
என் பாழ்பட்ட மனதில்!
பள்ளம் பறித்தாலும்!
நீ மட்டும்தானடா!
நிலையாய் இருந்து!
நீர் கண்டவன் என் கண்களில்.!
எல்லோரைப்போல !
நீயும் -எனை !
ஏடுகொடுத்து பிரித்திட்டாயே!!
உனது கரகரப்பில்!
எனது பெயர்!
இனி உச்சரிக்காமலே போகுமோ!
சொந்தமுள்ள உனைப்பற்றி!
சொல்லதொடங்கினேன்!
சொல்லால் எழுதத்தொடங்கினேன்!
என் சொற்கள்!
செயலிழந்து போனதடா!
என் பெண்மைக்குமுன்!
அதனால் சொல்லாமலே!
விட்டுவிட்டேன் எத்துனையோமுறை!
என் காதலை...!
இப்போது சொல்கிறேன்!
பிரிய விடைகேட்கும்!
உன்னிடம்!
என் பிரியமான் காத்திருப்பை.!
காத்திருக்கிறேன் !
உன் கடிதத்துக்காக!!
அதுவரை !
நான் சுவாசிப்பது !
காற்றை மட்டுமல்ல!
உன் நினைவுகளையும்தான்.....!
தென்றல்.இரா.சம்பத்!
ஈரோடு-2 !
என் பேனாமுனையில்!
பிறவியெடுக்கும்!
இந்த மௌனச்சொற்களில்!
என் மனதோடு மல்லுக்கட்டும்!
உன் பிரிவை.. நினைவை...!
பெரிதுபடுத்தி!
எழுதத்தெரியவில்லை எனக்கு.!
உறவு! பிரிவு!!
இரண்டும் சுமைதான்!
உறவில் !
மகிழ்வே ஒரு சுமை!!
மகிழ்ந்து பிரிந்தபின்-அதுவே!
நமக்கு மனச்சுமை

தேவதைகளின் ஊர்வலம் (II)

தொட்டராயசுவாமி.அ, கோவை
11.!
சண்டைக்காரியே!!
----------------------!
சற்றுமுன் நிலவரம்!
காதல் அலைகளை கடந்து!
கரையை கடந்தது!
உன் கண்கடலில் இருந்து.!
என் மனக்கரைக்கு.!
!
நான் தொலைய மறுத்த!
அனைத்து தருணங்களையும்!
உன் கண்கள் கொண்டு!
துளைத்தெடுக்கின்றாய் நீ,!
உன்னுள்!
தொலைந்துப் போவேனோ!
என்று என்னுள் ஒழிந்து!
கொள்கிறது என் காதல்.!
!
சண்டைக்காரியே!!
பேசாதா உன்!
இதழ்களும்!
பேசுகின்ற கண்களும்!
எனை தாக்கும்!
ஆயுதங்கள்!
காதல் நிலையத்தில்!
வழக்குத் தொடுத்தேன்!
அதற்கு தண்டனையாக!
நீ அளிக்க வேண்டும்!
என்க்கு 143 முத்தங்கள்.!
12.!
தினம் என் சோலையில்!
--------------------------!
நீ விட்டு சென்ற!
நினைவுகளை!
என் வீட்டு!
ரோஜா செடியிடம்!
தினம் பகிந்துக்கொண்டேன்!
பூக்களுக்கும்!
ஆசைப் பிறந்தது!
உனை காண!
தினம் பூக்கவேண்டும் என்று.!
இப்போது!
தினம் என் சோலையில்!
பூக்கள்…!
13.காதலிகள்.com!
------------------!
என் எட்டு திசைகளிலும்!
நீயே நிரம்பிக்கிடக்கின்றாய்!
என அறிந்து!
நான் பாதசாரியாக!
பயணித்த என் தேடலில்!
நீ எந்த திசையில்!
உயிர்வாழ்கின்றாய்!
என அறியாது!
திசையினையே!
நீயெனக்கொண்டு!
சுவாசிக்கின்றது!
என் நுரையீரல்!
சொல்வதை கேளாமல்!
சட்டென!
சிரித்துவிடுகின்றாய்!
நீ!
அப்பொழுதெல்லாம்!
ஆசையில் வீழ்கின்றது!
கன்னக்குழியுள்!
என் மனசு.!
என் செய்வது!
நீ அன்னிச்சையாக!
சுவாசித்து விடுகின்றாய்!
காற்றை!
பெயர்பெற்றது!
தென்றலென்று.!
!
வார்த்தைகளுக்குள்!
அடங்காத!
என் வாசகியே!
நீ வாசிக்க!
தவம் கிடக்கின்றது!
என் கவிகள்!
உன் நிலம்!
மழைப்பொழிய!
காத்துக்கிடக்கின்றது!
என் வானம்!
முரண்களுக்கு!
முடிவில்லை!
காதலில் மட்டும்!
நில்!
கவனி!
காதலில்!
காதலி!
ஆசை மிகுதியில்!
உன் கன்னம் தொடும்!
மழைத்துளியை!
அவசரப்பட்டு!
உதறிவிடாதே!
என் கவிதை!
கருவறையில்!
அவைகள்தான்!
உன் சாயல்!
குழந்தைகள்…!
உன்னால் காயம்பட்டு!
உடைந்துபோனது!
என் இதயம் - பின்!
சிதறிய எண்ணிக்கையில்லா!
அவைகள், மீண்டும்!
முந்தைய அளவைவிட!
உன்னை விரும்பச் செய்து!
வலியினிலும் இன்பமடைந்து!
உடைதலுக்கு தயாராகின்றன!
மீண்டும்.!
!
என் ஒவ்வொரு!
அணுவினிலும் நீ!
உடைக்க நினைக்காதே!
அவை இரண்டெனப்பிளந்து!
தரும் காதல் வெப்பத்தை!
தாங்கமாட்டாய்!
மெல்லியவளே!!
உன் பிரிவினில்!
கண்களில்!
கரையும் உப்புக்கரைசலை!
உள்வாங்கிக்கொண்டு!
பிரிதலில் உனக்கொன்றும்!
சலனமில்லை!
என்பதுபோல் பிரிந்துவிடுவாய்!
இருந்தும்!
ஏன்? விழிகொண்டு!
பேசமறுக்கின்றாய்!
நம் சந்திப்புகளில்!
நீ!
என் மனப்பூ!
சேமித்த உணர்வுத்துளியடி..!
பொறுத்திருந்துபார்!
காதல் முத்தொன்றை!
பரிசளிப்பேன்!
பூவின் இதழ்களை!
விரித்து…!
நம் நடைப்பயணஙகளில்!
நமக்கு துணையாக!
பூமரங்கள் சிந்திடுமே!
அந்த சிவப்பு பூக்களை!
நினைவிருக்கின்றதா?!
அவைகளே உனக்கான!
சந்தங்களை எனக்கு!
தந்து, கவிஞனாக்கின என்னை!
இன்று!!
!
வெளிர்ததெல்லாம்!
தேவதைகள் என்றென்னியிருந்தேன்!
உன்னைகாணும் வரை!
சாம்பல்நிறத்து!
தேவதையே!!
!
நீ ரசிக்கும் பட்டாம்பூச்சி!
இன்றும் என் விரல்களில்!
முத்தங்கள் பதிக்கின்றன!
உனக்கா காத்திருந்த!
இந்த தருணத்தில்!
!
உன்னை என் கவிகள்!
வெட்கப்படுத்தும் போதெல்லாம்!
நான் நீயாகிவிடக்கூடாதா!
என்றெண்ணி நானும்!
வெட்கமடைகின்றேன்!
!
நீ!
கவிதைகள் எழுதவேண்டும்!
நீயாக இருந்து!
நான் வாசிக்கவேண்டும்!
என் கவிகளை!
நீ படித்துணர்ந்ததை!
போல…!
!
உன்னைக் கண்டமுதலே!
வானமும் அதன் நீலமும்!
தனித்தனியே!
உணர்ந்து கொண்டேன்!
!
உன்னை கண்டமுதல்!
இதுநாள் வரை!
நீ எங்கு,எப்படி இருந்தாய்!
என்பதிலேயே!
தாகம்கொண்டது!
மனசு!
!
என் கால்களிடம்!
கேட்டுப்பார்!
உனக்காக காத்திருந்த!
தருணங்களில்!
என் கால்களின்!
வலியை எப்படிகரைத்தேன்!
என்று அழகிய கவியாக!
சொல்லும்..!
உன்னை காதலிக்க ஆரம்பித்தபிறகு!
அவைகளும் கவிஎழுதுகின்றன!
!
என் அனேக கிறுக்கல்களை!
நீ படித்ததாலேயே அவைகள்!
இன்று கவிதைகளாகிவிட்டன!
!
நான் மொழிப்பெயர்க்க!
ஆசைப்படும் அனைத்து!
தருணங்களும்!
உன் தனிமையே..!
!
விடிந்த பின்னும்!
தொடரும், நாம்!
தொடங்கிய நேற்றைய பேச்சு!
தொலைபேசி இன்னும்!
செவியோரம் சினுங்கிக்கொண்டிருக்கின்றது!
அணைக்க மனமில்லாமல்!
!
இன்றும்!
என்னெதிரே!
தேனீர் குடுவை!
உனக்காக வாங்கிவைத்திருக்கின்றேன்!
நீ பருக அருகிலில்லை!
என்றாலும்!
உனக்கானவைகளை!
நான் என் செய்ய?!
!
நான் உன்னிடம்!
இதுவரை சொல்லாத!
தவிப்பை விட!
நீ யாரிடமும்!
சொல்லிவிடக்கூடாது!
என்ற பயமே!
என்னை கவலையடையச்செய்கின்றது!
நான் உன்னை காதலிக்கின்றேன்.!
!
நீரின் மேல்!
இலைவிழுந்து போல்!
இன்னும்!
அடங்கவில்லை என்னுள்!
உன் ஞாபக அதிர்வுகள்..!
புத்தகக் கண்காட்சியில்!
உன்னை!
என் கண்கள் படிப்பதை!
நீ பார்த்துவிட்டதில்!
என் கண்களை!
கையில் கிடைத்த புத்தகத்தில்!
பதித்தேன்..!
தலைப்பு காதல்.!
-தொட்டராயசுவாமி.அ

போர்ப் பறப்பு

ரவி (சுவிஸ்)
என் இரவுகளைக் கொத்தி!
துளைகளிடும் பறவைகளின் ஒலி!
தூக்கத்தைக் கலைக்கிறது.!
பயங்கரவாதத்துக்கு எதிரான போர்!
சமாதானத்துக்கான போர்!
சனநாயகத்துக்கான போர் என்றெல்லாம்!
நிறம் விரித்து வருகிறது பறவைகள்!
அவ்வப்போது.!
அது ஒரு ஈழக்குழந்தையையோ!
அல்லது பலஸ்தீனக் குழந்தையையோ!
இரத்தம் சொட்டச் சொட்ட தன்!
கூரலகால் காவிச்செல்கிறது.!
போர்களுக்கான நியாயங்களை நிரப்பியபடி!
அதன் எசமானர்கள் போலவே!
என் நண்பனோ நண்பியோ மதுக்கோப்பையுடன்!
விவாதித்துக் கொண்டிருத்தலும்கூடும்.!
முரண்களின் வெடிப்புகளில்!
கசியத் தொடங்கும் நீர்க்கோட்டை!
நீர்வீழ்ச்சியாய், பின் காட்டாறாய் ஓடவைக்கும்!
கலையறிந்த மானுடர் சபைமுன்!
போர்நிறுத்தம் போர்நிறுத்தம் என!
கூவியபடி கடைவிரிப்பர் பான்கீமூன்கள்.!
தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் உரிமை!
இஸ்ரேலுக்கு உண்டென!
ஒபாமா வெள்ளையாய்ச் சிரிக்கிறார்.!
எப்போதுமே அவர்களிடம்!
போர்களுக்கான நியாயங்கள்!
பிறந்தபடியேதான் இருக்கின்றன.!
அதை ஆதரிப்பவர்களும் வசதியாய்!
கேள்விகளைத் தொலைத்துவிடுகின்றனர்!
அவர்களின் அளவுகோல்கள்!
கிளைவிடத் தொடங்கிவிடுகின்றன.!
அழிவுகளின் பின்னரான துயிலெழலில்!
போர்களை எதிர்ப்பதான அவர்களின் கூச்சலிடை!
போர்களுக்கான நியாயங்களும்!
எங்கோ ஓர் மூலையில்!
முட்டை இட்டுவிட்டுப் போய்விடுகிறது,!
என் இரவுகளைக் கொத்தி!
துளையிடும் பறவைகளை அவர் கண்டாரில்லை

வல்வரசாகும் இந்தியா

வைரபாரதி
ஞாலத்தின் மாமேதையே!!
ஞாயிறென நடமாடும் ஜோதியே!!
காலத்தால் அழியாத காவியமே - தங்கள்!
கால் பணிந்து பாடுகிறேன் கவிதை...!
காலையில் சுருங்கிய படுக்கையாய்;,!
கசங்கிக் கிடக்குது நம் பூமி.!
நாளை மாறும் நம்பிக்கை உண்டு,!
நல்லோர் உம் விழிகள் கண்டு!
எழுதுகிறேன் என் உணர்வை....!!
விரல்களால் வேலி போடுவோம்!
விளக்கெனும் வல்லமை ஜோதிக்கு - உம்!
அருளால், அத்தீப சுடரால் - நம்!
அகிலம் நடைபோடும் அப்பாதைக்கு!!
சூரியன் கிழக்கே வரமறுத்தால்!
சுதந்திர இந்தியாவுக்கு ஏது விடியல்?!
பாரினிலோர் நல்லிடத்தை நம் பாரதம்!
பாராமல் இறக்கமாட்டேன் இம்மண்மடியில்!!
ஈராயிரத்து இருபதுவரை பொறுக்கலாமா?!
ஈங்கிருந்தே சாதிக்கப் புறப்படுவோம் - நம்முள்!
ஓராயிரம் அப்துல்கலாம் இருப்பதனால்!
ஒளி மங்கிய வல்லரசில் ஒளியேற்றிடுவோம்!!
சிகரத்தின் மறு பெயர் உச்சிமலையே - அதில்!
இன்னொரு சிகரம் நம் உச்சந்தலையே!!
'அ கரமே முதலெழுத்து போலும் - நம்!
அகிலம் வெல்ல வெகுதூரமில்லை அந்நாளும்!!
தலையொன்றுக்கு ஐந்தாயிரம் வேண்டுமாம்!
தரணி வங்கியில் நம் கடனொழிய - நம்!
கலை நட்சத்திங்கள் வருமானால் கோடிகளுண்டு - அதில்!
கர்ணன்மார்கள் யாருண்டு?!
இருந்தும்....!
உலைக் குமிழ்களுக்கு மூடியிட்டாலும் அதன்!
உத்வேக முயற்சியால்; முட்டித்திறக்கும்!
இளைய வருகையின் இனிய துணையால்!
இந்தியா வல்லரசாகும் நாள் பிறக்கும்!!
துணிவினை மனதில் கொள்வோம் - எல்லா!
துறைகளிலும் வெல்வோம்!
இனி வறுமை ஒழிந்து போகும்!
இந்தியா வல்லரசாகும்