தோழியரே... தோழியரே
ஆ.மணவழகன்
தோழியரே! தோழியரே! !
நலமா! நீங்கள் நலமா!? !
காலத்தின் கருவறையில் !
கால்தடத்தைப் பதிக்க எண்ணும் !
கவிதைகளே(!?).. !
நலமா, நீங்கள் நலமா!? !
எந்தன் உணர்விற்குள் உறுத்தி நிற்கும், !
உங்கள் உள்ளம் துடைக்க சில கேள்வி! !
எம் பண்பாட்டைக் காத்து நிற்க - இது !
படை திரட்டும் ஒரு வேள்வி! !
'பெண்மொழி' என்று சொல்லி - நீ !
பெண்மையைப் படையல் வைப்பதா? !
உன்மொழி படித்த பெண்ணே - உன் !
எழுத்தைத் தள்ளி வைப்பதா? !
அச்சம் தவிர்த்து ஆடை களைந்த நிலையை - நீ !
அனைவர் முன்னும் அள்ளி வைப்பதா? !
கொண்டவனோடு கொண்ட உறவை - பார் !
கொறிப்பதற்குக் கொடுத்து வைப்பதா? !
கழிப்பறை வாசகத்தை - நீ !
கவிதை என்று சாற்றி வைப்பதா? !
காற்றினில் கலையும் மேகத்தை !
'காலச் சுவடு'களில் ஏற்றி வைப்பதா? !
ஆடைக்குள் மறைக்கும் அழகை !
அட்டைப் படமாய் அரங்கேற்றுவதா? !
உச்சரிக்கக் கூசும் சொல்லை !
ஊரையே நீ உச்சரிக்க வைப்பதா? !
இலக்கியத்தில் இடம்பிடிக்க - பெண் !
இயல்பை நீ இழக்கலாமோ? !
'பெண்மொழி' என்று சொல்லி !
பேய்மொழி பிதற்றலாமோ? !
வருங்காலம் உனக்கோர் இடத்தை !
எப்படியும் வகுப்பதுண்டு! !
வரலாற்றைப் புரட்டிப் பார்...காந்தியோடு, !
'கோட்சே'யும் இருப்பதுண்டு! !
சங்கத்திலும் உள்ளதென்று - பொய்யைத் !
தயங்காமல் உரைக்கின்றாய்! !
சங்கத்தைக் கற்றதுண்டா? - நீ !
தங்கத்தைத் தொட்டதுண்டா? !
மலர் சேரும் வண்டிற்கு !
மணிநா முடித்த மாண்புண்டு! !
மான் பிணை கொண்டதென்று !
மருவி நின்ற பெண்ணுண்டு! !
நாரையே சாட்சி என்று !
நவின்ற ஒரு நங்கை உண்டு! !
அறத்தோடு நிற்றலென்ற !
அற்றை நாள் மாண்புண்டு! !
மரத்தை மூத்தாள் என்று !
மன்னவனை மறுத்தாள் உண்டு! !
சங்கத்தை சாட்சிக்கிழுக்கும் !
சடமே! நீ தெளிவாய் கண்டு! !
பண்பு கெட்ட உன்னிடம் - நான் !
பண்பாட்டைக் கேட்கவில்லை! !
உனைப் படிக்கும் வெளிநாட்டார் !
உரைப்பரே! !
எம் பெண்டிரையும் கேவலமாய்!! !
உன்னிடத்தில் ஒன்று சொல்வேன்! அதை !
உன்னவர்க்கும் உரைக்க மறவாதே! !
'எழுத்தில் பரத்தமை' - அதை !
இனிமேலும் தொடராதே