புதுமைகளால் மிஞ்சும் குழப்பங்கள்.. காதல் வரம் பெற்றிடாத ஞானிகள்!
01.!
புதுமைகளால் மிஞ்சும் குழப்பங்கள்!
-----------------------------------------------!
முயங்குதல் பொருட்டும்!
சந்ததி பொருட்டும்!
வாழ்க்கைத்துணை பொருட்டும்!
முறைப்படுத்துவதாய்!
எழுதப்பட்ட விதிகள்!
தளர்த்தப்படுகின்றன!
புதுமை என்ற பெயரால்...!
முன்னெப்போதும் கண்டிராத!
குழப்பங்கள் மிஞ்சுகிறது!
அதன் பொருட்டு...!
கூண்டுக்குள் கற்கவேண்டிய!
பாடங்களை!
இருள் சூழ்ந்த வனத்திலும்!
மெளனம் கவிந்த மயானத்திலும்!
கற்றதில் என்ன கண்டீர்கள்...!
இந்த மிதவை!
அழகாய்த்தான் ஊறுகிறது!
அதன் போக்கில்...!
ஆனால்,!
ஒரு பெரும் நீர்வீழ்ச்சியில்!
அதன் கதை முடியப்போவது!
தெரியுமா உங்களுக்கு...!
02.!
காதல் வரம் பெற்றிடாத ஞானிகள்!
----------------------------------------!
வருடங்கள் கடந்தாலும்!
காத்திருப்புக்கள் முதிர்வதில்லை...!
குழல்களில் சூடுவதான!
கற்பனைகளின் பூக்கள்!
இன்னும் பிறந்திருக்கவில்லை...!
எப்போது பிறக்குமென்கிற!
தகவலுமில்லை...!
துணைக்கான எதிர்பார்ப்புகள்!
துணைகளிடம் நிரைவேறுவதற்கில்லை!
என்பதே காத்திருத்தலில்!
முடிகிறதென்பதை துணைகள்!
நினைத்துப்பார்ப்பதில்லை...!
கவனிக்கப்படாத வண்ணங்களின்!
கலவைகளால்!
வசீகரம் விரும்பப்படுகின்றது...!
தொலைக்கப்படும் கலவைகளால்!
தனித்தே விடப்படுகின்றன!
எதிர்பார்ப்புகள்
ராம்ப்ரசாத், சென்னை