உ(து)யர வாழ்க்கை - மார்கண்டேயன்

Photo by Paweł Czerwiński on Unsplash

இனி உயரப் போறவைகளுக்கெல்லாம் . . !
ஊட்டம் கொடுப்பதற்கு!
தான் உயரத்தில் நாங்கள் . . . !
உயர்வை காண முடியவில்லை!
என்றழுபவர் மத்தியில்!
உயரங்கள் மட்டுமே எங்கள் உயிர்க்கான வழி !
எங்கள் உழைப்பின்!
எழுத்துக்கள் எடுத்தெறியப்பட்டு!
உயரங்கள் அழகூட்டப்படும் !
உறங்கும் போது போனாலென்ன!
உயரத்திலிருந்து போனாலென்ன!
சிந்தனைகளிலும் உயர்ந்து தான் !
உயிர்போன பின்!
உண்டி உறைவிடம் ஊன்(உடல்) அனுப்ப!
எஞ்சியவற்றை உறையில் அனுப்பும் உண்மை !
உயரங்கள் மாறிக்கொண்டிருக்கும்!
உயிர்க்கான உத்தரவாதம்!
மட்டும் எள்ளளவும் மாறாமல் !
பயமில்லையா ? யார் சொன்னது!
எங்கோ ஒரு தேசத்தில், உறவுகள் உயிரோடு இருக்கவேண்டுமே,!
என்ற பயம் தான்இ எப்பொழுதும் !
எப்பொழுதாவது உயரத்தில்!
உள்ளவர் கணக்கு உதைக்கும்!
உச்சி வெயிலில் கண்ணீர் உறைந்து போயிருக்கும் !
உயர்ந்த பணி!
முடித்த தருணத்தில்!
விண்ணுலகம் உயர்ந்தவன் கணக்கும் உறைக்குள் !
உயரம் உருப்பெறும் போது!
உள்ளே செல்ல!
அனுமதி ஏது ? !
எங்கோ ஓரிடத்தில்!
எதுவோ சரிசெய்ய!
ஊஞ்சலாடுவதோடு உறவு முடிந்துவிடும் !
உடலின் உணர்வுகளும் உபாதைகளும்!
நீர்த்துபோயினும்!
வயிற்றிற்கு மட்டும் அவ்வப்போது !
உயரம் தாண்டுதலில்!
உயிர் மிச்சமிருந்தால் . . . ?!!!!
ஊருக்கு சென்று
மார்கண்டேயன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.