மலரே... !
நீ அழகே அழகு!
மொட்டாக இருக்கையில்!
தொட்டதில்லை சூரியனும்!
உன் பட்டு இதழ்களை !
சிட்டுக்களின் மகுடியில்!
மொட்டுதழை ஏன் விரித்தாய்!
பட்டுக்குஞ்சம் நடுவே!
நீ சொட்டுத் தேன் கொடுத்தாலும்!
சிட்டுக்கள் உன்னிதழ்கள் மேல்!
வைத்துப் போவது!
ரணங்களின் வடுவே !
அழகெல்லாம் உன்னிடம் கொடுத்தவன்!
ஆயுளை ஏன் சுருங்கக் கொடுத்தான்!
துயரக் கடலில் நீ !
மூழ்குவதை கண்டுதானோ. !
வல்வை சுஜேன்