வண்டியில் பூட்டிய!
மாடுகள் முதுகு நிமிர்த்தி!
நம்பிக்கையோடுதான் நடக்கிறது!
அகப்பட்டதை ஏற்றிய!
கைகளும் கால்களும்!
வலிகளோடுதான் மிதக்கிறது!
குண்டு சுமந்து வரும் வானூர்தி!
நெஞ்சைக் கிழிக்கிறது!
நெடுநாள் எரியும் நெருப்பில்!
பிஞ்சைப் புதைக்கிறது!
பதினைந்தைக் கடக்காத பருவத்தின்!
கனவுகள் பறித்து!
வன்னிக் காட்டின் நடுவிலே!
வான் குண்டு!
குருதிக் கோலம் போடும்!
ஆசை ஆசையாய்க்!
கட்டிய வீடுகள் எல்லாம்!
முகமிழந்து... முகவரியிழந்து...!
அழிந்து போய்க் கிடக்க!
ஆச்சியின் புலம்பல் கேட்கும்!
பாடசாலைக்குப் போன பிள்ளை!
பாதி வழியிலே...!
தாய்மண்ணை அணைத்தபடி!
இரத்தச் சகதிக்குள்!
விழிகள் திறந்தபடி!
இழவு வீட்டின்!
குரல்கள்கூட இல்லாமல்!
நடுத் தெருவில்!
இறந்து கிடக்கின்றான்!
பரந்தன் பாடசாலையில்!
பரீட்சை எழுதமுடியவில்லை!
கதறி அழுது கொண்டு!
சிதறி ஓடுது குஞ்சுகள்!
பட்டினியால் மரணங்கள்!
பார்த்துப் பழகிவிட்டது!
மனவதையால் மரணங்கள்!
புதிதாக பிறக்கிறது!
எங்களோடு வாழ்ந்த!
குற்றத்திற்காகவே!
ஆறறிவு படைத்த!
மனித மிருகங்களால்!
ஐந்தறிவு படைத்த!
மிருக மனிதர்கள்கூட!
சிதைந்து கிடக்கிறார்கள்!!
இறைச்சிக் கடைகளில்!
ஆடு மாடு அறுப்பவன்கூட!
இன்று திரும்பி நின்று!
அழுகிறான்!
அவனுக்கும் வலிக்கிறது!
பச்சைப் புல்வெளிகள்!
எறிகணை வீச்சில் கருகிட!
மாமரத்தின் குயில்களும்!
எங்கோ பறந்து போனது!
குரைக்கும் நாய்கள் கூட!
இப்போது எமக்காக!
கண்ணீர் விட்டழுகிறது!
ஏக்கத்தோடு பெருமூச்சும்!
விடுதலை நெருப்பின்!
விழிகள் பார்த்தபடி!
காத்துக் கிடக்க!
உயிர்ப்பலிகள் தொடர்கிறது!
உங்களுக்கு இரவிலாவது!
விடிந்தது!!
எங்களுக்கு பகலிலாவது!
விடியுதா பார்ப்போம்!!
-வசீகரன்!
நோர்வே

வசீகரன்