தவிப்பின் தீராத கணங்கள் - ஜதி

Photo by FLY:D on Unsplash

கடவுளிடமுமல்லாத சைத்தானிடமுமல்லாத!
முடிவிலியின் கணங்கள்!
தவிப்பின் பிசுபிசுக்கும் பிடியினில்!
சிக்கிக்கொண்டே நீள்கின்றன. !
இரவினை ருசிக்கமுடியாதபடி!
ஒரு பெரும் பசியினடியில்!
புதைந்து கிடக்கின்றேன் !
தவிப்பின் தீராக்கணங்களினால்!
நெய்யப்பட்ட இரவுகள்!
நாட்களின் சுவாதீனத்தை!
அமுக்கிக்கொண்டிருக்கின்றன !
வெறுமை கொட்டிக்கிடக்கும் படுக்கைமீது!
போர்வைக்குள் சிறைப்பட்டு!
நொடிகளெல்லாம் சிதையுண்டு போகின்றேன். !
கடிகாரத்தின் எண்ணிக்கை!
மண்டையில் சமட்டியடித்துக்கொண்டிருக்கிறது… !
அணலில் வெந்து வடியும் தேகத்திலெங்கும்!
தவிப்பின் வலிகள்!
தெரித்து வெடிக்கின்றன… !
நிரப்ப முடியாக் கோப்பையொன்றில்!
என்னை உருக்கியுருக்கி!
ஊற்றிக்கொண்டேயிருக்கிறேன் நானும்… !
!
20090527
ஜதி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.