பூமேலே நேசம் - ராமலக்ஷ்மி

Photo by Ryan Grice on Unsplash

'பூக்களுக்குஅழகு பூத்திட்டசெடியிலே!
புன்னகைத்தபடி இருப்பதுதான்.!
இதுபுரியாதவர் என்னமனிதரோ?'!
சிரித்துக்குலுங்கிய பவளமல்லிகளைப்!
பார்த்ததும்கிடைத்த பரவசத்தை!
அடுத்தநொடியே அலுப்பதில் தொலைத்தாலும்!
கண்ணுங்கருத்துமாய்த் தன்தோட்டம்!
பேணிவந்த கனகத்தின் கொள்கையிலே!
தவறேதும் தெரியவில்லை.!
அவர்நந்தவனத்தை அலங்கரித்து வந்தன!
செவ்வரளி செம்பரத்தை!
சிவந்திசம்பங்கி சிவப்புமஞ்சள்ரோஜாக்கள்!
மகிழம்பூ நந்தியாவட்டை!
வண்ணவண்ண ஜினியாக்கள்.!
இவற்றுக்குநடுவே புதிதாக உயர்ந்து!
சுற்றுச்சுவரினை விடவும்வளர்ந்து!
தெருவைஎட்டிப் பார்த்து!
இதமாய்ச் சிரித்த!
இருசூரியகாந்திகளைக் கண்டதும்!
பூந்தோட்டக் காவல்காரம்மாவின்!
கடுகடுப்பு மறந்தேதான் போனதுபாவம்!
சிறுமி செண்பகத்துக்கு.!
அச்சோலையைக் கடக்கும்போதெல்லாம்!
கம்பிக்கதவுளின் ஊடாக!
மெல்லிய ஏக்கப்பார்வையை படரவிட்டபடி!
விடுவிடுவெனப் பயந்துநடப்பவளைத்!
தயங்கித்தயங்கிக் கால்தேய்த்து!
நிற்க வைத்தன!
மலர்ந்துமயக்கிய மஞ்சள்காந்திகள்.!
ஆதவன் உதிக்கும் திசைநோக்கி!
வந்தனம் பாடி அவைநிற்க!
தன்னை எதிர்பார்த்தே!
தவமிருப்பதாய் நினைத்து!
தலையசைக்கும் தங்கமலர்களுக்குக்!
கையசைத்துச் செல்லுவாள்!
காலையிலே பள்ளிக்கு.!
மணியடிக்கக் காத்திருந்து!
மாலையில் திரும்புகையிலோ!
மறையும் கதிரவனை!
மறக்காமல் வழியனுப்பும் சூரியப்பூக்கள்!
அவளைக்காணவே மேற்கு திரும்பி!
வட்டக்கருவிழி பூரிக்க!
ஆவலாய்ப் பார்த்துநிற்பதாய்!
எண்ணந்தனை வேறு!
வளர்த்து விட்டிருந்தாள்!!
உடைத்து ஊற்றெடுத்த பாசத்தினை!
அடைத்து வைக்கும் வித்தை!
அறியாத பருவத்தினள்!
கருணைகொள்வாள் கனகமெனக்!
கனன்றெழுந்த கணநேரச்சிந்தனையில்!
துணிந்துகை காட்டியேதான்விட்டாள்!
ஒருமலரேனும் வேண்டுமென.!
செடியோடு அவையிருந்தால்!
இன்னும் சிலகாலம் வாழ்ந்திடும்!
உனக்காக நான்பறித்தால்!
ஒரேநாளில் வாடிவிடும்!
மூடிக்கொண்ட வாயிற்கதவுகளுக்கு!
இந்தப்பக்கம்!
வாடிப்போய்நின்றிருந்தாள் செண்பகம்
ராமலக்ஷ்மி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.