ஆசை அலைகள்!
ஆர்ப்பரிக்கும்!
அரசியல் அரங்கிலுன்!
அடிப்படை!
நியாய உணர்வுகள்!
நசிந்து விடாதென்றே!
நம்பி இருந்தோம்!!
இன்று!
புல்லுருவிகள்!
புசிக்கத் தொடங்கி விட்டன.!
அவைஉன் பழைய!
புண்ணியங்களைப்!
புதைத்து விட்டுப்!
பணத்துக்காகப்!
பாவம் பண்ணச் சொல்லி!
பசியாறத் தொடங்கி விட்டன!!
அந்த!
நய வஞ்சகர்களின்!
கயமை மகுடிக்கு!
நர்த்தனம் ஆடும்!
நச்சுப் பாம்பாக!
நீமாறி விட்டதை!
முதலில்!
எம்கண்கள் நம்ப மறுத்தாலும்!
பின்னர் உன்னால்!
எம்நெஞ்சில் உருவாக்கப்பட்ட!
புண்கள்-!
அவை!
நிஜமே என்று!
நிச்சயப்படுத்தி விட்டன!!
அன்று!
உன் உதடுகள்!
உச்சரித்த!
உறுதி மொழிகளை!
உண்மையென்றே நம்பி!
உற்சாகம் அடைந்திருந்தோம்.!
அவை அச்சான!
தினசரிகளைக் கூட!
ஆதாரமாய்க் கையிலேந்தி-!
அன்றைய கஞ்சியைத் துறந்து!
ஆளுயர மாலையாக்கி-!
ஆவலுடன் உன்!
ஆடம்பர மாளிகையின்!
வாசல்தேடி வந்திருந்தோம்.!
கற்றைநோட்டுக்களைத்!
தந்து செல்லும்!
கனவான்களின்!
கார்களுக்கு மட்டும்!
விரியவே திறந்த!
வெளிக் கதவுகள்-!
கனவுகளைக் கண்களில்!
தேக்கிநின்ற எங்களைக்!
கடைசி வரை!
கண்டு கொள்ளவேயில்லை!!
அட!
போலிக்காகக் கூடப்!
பொது மக்களைப்!
பொறுத்துப் போகாத!
புதுமையை!
இங்குதான் பார்க்கிறோம்!!
குற்றம்யாவும் அந்தக்!
கூர்க்கன்மேல்தான் என்றெண்ணி!
அப்படியும் அயராமல்!
அடுத்தமுறை வந்திருந்தோம்.!
உன்!
தரிசனம் வேண்டி!
எமை மதியாத-அத்!
தலைவாசல் விட்டுச்!
சற்று தள்ளியே!
கவனமுடன் இம்முறை!
தவமிருந்தோம்.!
வெளி வந்ததுன்!
படகு வண்டி.!
தென் பட்டது!
உன் திருமுகம்.!
முன் வந்து!
முகம் மலர்ந்தோம்.!
கை கூப்பிக்!
கலங்கி நின்றோம்.!
நீயோ!
கண்டு கொள்ளாமல்!
வண்டியை விடச்!
சொன்னாய்.!
ஆனாலும்!
கணநேரத்தில் சுதாகரித்து!
காரினை மறித்துக்!
கரகோஷம் இட்டோம்.!
நீயோ!
காவலரை நோக்கிக்!
கண்ஜாடை காட்டியே-!
எம்மைக்!
கலைக்கச் செய்தாய்.!
உன் வாகனம்!
எம் நம்பிக்கைகள்மீது!
புழுதியை இரைத்துவிட்டுப்!
புறப்பட்டுச் சென்றது.!
அப்போதுதான்!
இந்த!
அப்பாவி!
ஜனங்களின் மனங்கள்!
யார் பாவி என்று!
தப்பின்றி உணர்ந்தது!
காலங்கடந்தே யாயினும்!
தப்பின்றி உணர்ந்தது.!
போலிக்காகக் கூடப்!
பொது மக்களைப்!
பொறுத்துப் போகாத!
புதுமையைப்!
பழகவும்!
தெரிந்து கொண்டோம்.!
ஓட்டு வீட்டில்!
வாழ்ந்த உன்னை!
ஓட்டுப் போட்டு!
மாடி வீட்டில்!
ஏற்றி வைத்தோமே?!
பதவிக்குநீ வந்தால்!
எம்பிள்ளைகள் படிப்பார்-!
பானைச்சோறு உண்பார்-!
படுத்துறங்க கூரைபெறுவார்-!
என்றெதேதோ எண்ணித்தானே!
ஊரோடு ஒட்டுமொத்தமாய்!
உனக்கோர்!
வெற்றிக்கொடி அளித்தோம்!!
தேடித்தேடி வந்தன்று!
தேனொழுகப் பேசியநீ!
உதவிகேட்டு இன்று!
கதறிவரும்!
எங்களைக் கண்டு-!
பதறியடித்து!
ஓடிவரா விட்டாலும்!
பாராமுகமாய் இருப்பதைக்!
கூடவா தவிர்த்திட!
இயலவில்லை?!
பட்டத்து அரசன்நீ!
கொத்தவரும் பருந்தானாய்.!
சிதறிப் போன!
நம்பிக்கைகளைச்!
சேகரிக்கும் முயற்சியில்!
சிறகொடிந்து போன!
சிட்டுக் குருவிகளாய்!
சீரழிந்து கொண்டிருக்கும்!
எங்களுக்கு-உன்!
சிந்தனையில் இடமுண்டா!
என்றறியோம்!!
உனக்கிருக்கும் இன்றைய!
தகுதியைத் தந்ததே உன்!
தொகுதி மக்கள்தாம்!
என்பது!
உனக்கு மறந்தேவிட்டது.!
உன்!
மனசாட்சியும் மரத்துவிட்டது.!
சுயநலம் எனும்!
சுகந்தமான கிரீடத்தைச்!
சூடிக் கொண்டு!
மனபலம் இழந்து!
மருண்டு போய்!
மருகும் எங்களுக்கோர் நல்ல!
மாற்றம் தர!
மறுக்கும் உன்!
மனசாட்சி மரத்தேதான்விட்டது!!
எமது!
உயிர்கள் இங்கே!
ஊசலாடிக் கொண்டிருக்க!
நீயோ!
உற்சாகமாய் ஊழலில் அங்கே!
ஊஞ்சலாடிக் கொண்டிருக்கின்றாய்!!
உலை வைக்கவும்!
வகையின்றி எம்!
உள்ளங்கள் உழலுவதை!
உணராமல் எம்!
உணர்வுகளுக்கு!
உலைவைத்து விட்டுநீ!
உல்லாசமாய் உலகைச்சுற்றி!
உலாவந்து கொண்டிருக்கின்றாய்!!
நீங்கள்!
வெற்றி பெறுவதே!
வெளி நாடுகளைச்!
சுற்றிப் பார்க்கத்தானே?!
ஆசை அலைகள்!
ஆர்ப்பரிக்கும் அரசியல்!
அரங்கிலுன் அடிப்படை!
நியாய உணர்வுகள்!
நசிந்து விடாதென்ற!
எங்கள்!
நம்பிக்கைகள்தாம்!
நசிந்து விட்டன!!
அடிப்படை!
வாழ்வாதார வசதிகள்!
என்பவை எமக்கு!
கானல்!
நீராகி விட்டன!!
வறண்ட வாழ்வெனும்!
வகுத்தலுக்கு விடைதேடும்!
வெற்றுப் பிம்பங்களாகி!
நிற்கின்றோம்!!
***!
ஒவ்வொரு தேர்தலும்!
நம்பிக்கையை விதைப்பதும்!
ஓரிரு திங்களில்அவை!
தேய்ந்து மறைவதுமாய்!
இடிதாங்கி இடிதாங்கி எம்!
இதயங்கள் வலுப்பெறுகின்றதா!
ஆடி ஆடி ஒருநாள்!
அடங்கியே விடப்போகின்றதா?!
இக்கேள்விகளுக்கு விடையைத்!
தேடிடத் தெம்பில்லாமல்!
எம்மைச் சுற்றிப்படர்ந்திருக்கும்!
சூனியம் சுட்டெரிக்கப்பட்டு!
வெளிச்சமானதோர் விடியல்!
வந்தேதீரும் என-!
நசிந்துபோன நம்பிக்கைகளை!
வழக்கம் போலப்!
புதுப்பித்துக் கொண்டு-!
இதோ கிளம்பி விட்டோம்!
இப்போதும் வாக்களிக்க

ராமலக்ஷ்மி