வலையும் வலமும் - சு.திரிவேணி, கொடுமுடி

Photo by Julian Wirth on Unsplash

தோழமையே... !
உலகின் உன்னதம் நட்பாம் !
சொல்கிறார்கள் இன்னமும்! !
நானும் கூட நம்பியிருப்பேன் - !
உன்னைக் காணாதிருந்தால்! !
உலகின் சுகந்தங்கள் எல்லாம் !
ஒன்றாய்த் திரண்டிருப்பதாக கருதி !
இருப்பேன் !
பறவை தேடும் வேடனாய் !
உறவை நாடுவாய் நீ! !
பறவைகளை நாடிய போதிலும் !
அவன் பறவை நேயம் கொண்டோனில்லை !
பறவையின் வலி எப்போதும் !
வேடனுக்குப் புரிவதில்லை !
நாடலும் புண்படுத்தி வெல்லலும் !
அவன் இயல்பு! !
கால எல்லைகளுக்குக் கட்டுப்படாமல் !
வலிகொண்டலைய வேண்டியது !
எதிர்ப்புத் திறனில்லாப் பறவைதான்! !
வலி கொண்டலையும் பறவையின் !
அழுகுரல் எவர் செவிகளையும் !
எட்டியதில்லை !
எட்டிய செவிகள் அவ்வுணர்வுகளை !
உணர்வதுமில்லை !
திறனில்லாப் பறவையும் கேளாச் !
செவிகளும் !
இருக்கும் வரை !
வலை விரித்து நீயும் சுகமாய் !
உலகை வலம் வரலாம்
சு.திரிவேணி, கொடுமுடி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.