கல்விநிலையச் சீருடை அழகு.!
செல்வம் வறுமைச் சமநடை அலகு.!
சொல்லும் தலைப்பில் கவிதை தெளிப்பும்!
நல்ல சீரடி நடைபாதை வனப்பு.!
தலைப்புக் கொடுத்துக் கவிதை தெளிப்பு!
மலைப்புறுவார் மாந்தர் இயல்பு.!
வல்லமைச் சொற்கள் வாலாயமானால்!
வில்லில் நாண், ஏற்றுதல் போலாம்.!
வலைவீசி வகையாக மீன் பிடித்தலாக!
வட்டம் கட்டமாய் வளைத்துப் போடலே!
தலைப் பெறிந்து கவிதை பிடித்தல்.!
கலைச்சுவை இவ்வகைக் கவியாக்கமெனலாம்.!
இலையிலிடும் உணவை ருசிப்பதான உணர்வு,!
உலைப் பானை தலைப்பு என்றாகி,!
உள்ளெயிடுதல் மரபு, புதுக்கவிதையாகி!
அள்ளுதல் நற் கவிதைப் பொங்கலாகும்

வேதா. இலங்காதிலகம்