பிடிக்காத வாத்தியாரின்!
பாட நேரங்களில்!
கூர்ந்து கவனிக்கிறார்கள்!
அடுத்த பாட வாத்தியாரை!
வரவேற்க போகும் மணியோசையை!
அந்த நாளின் !
இறுதி பாடத்தின்!
கடைசி பத்து!
நிமிடங்களில்!
போர்கால அடிப்படையில்!
ஆயத்தமாகிறார்கள்!
விடுப்பு மணியின் !
மூன்றாவது மணி !
யாரும் கேட்காமல் !
ஆனாதையாய்!
வகுப்பறையில்!
உட்கார்ந்தபடியே !
ஒளிந்துக் கொள்கிறார்கள்!
வீட்டுப்பாடம் !
செய்யாத நாட்களில்!
கடமையை செய்!
பலனை எதிர் பார்க்காதே!
கத்துக் கொடுத்தார்!
ஆசிரியர்!
முதன் முறையாக!
வீட்டுப்பாடம் முடித்தும்!
படித்தும் வந்தவனிடம்!
அவர் ஒன்றும் கேட்கவில்லை!
வாத்தியார்!
அடிக்கும்போது வலித்தாலும்!
அடிவாங்கியவர்களிடம்!
பெருமைக்காய் சொல்லிக்கொண்டான்!
தனக்குத் தான்!
அடி பலம் என்று

ப.பார்த்தசாரதி