சமையலறையில் நீ!
அருகிருந்து உதவவேண்டாம்.!
‘உதவவா?’ என்ற !
ஒரு வார்த்தையே போதும்!
உன்னை அமரவைத்து !
ஊட்டிவிடுவேன்.!
வீட்டைத் தூய்மை செய்ய!
நீ வந்து துடைக்க வேண்டாம்!
நாற்காலியில் சாய்ந்து கொண்டு!
ஜாலியாகப் பார்த்துக்கொண்டிருக்கும்!
தொல்லைக்காட்சியை!
கொஞ்சம் நிறுத்திவிட்டு!
ஒதுங்கி இடம் கொடுத்தாலே போதும்!
மனதில் உன்னைத்!
திட்டுவதற்காகக்!
கொட்டிக்கிடக்கும்!
வார்த்தைகளோடு சேர்த்துத்!
துடைத்தெடுப்பேன்.!
‘அசுத்தமாக இருக்கும்!
குளியலறையை !
சுத்தம் செய்தால் என்ன?’!
என்று கேட்பதை விடுத்து!
குளிக்கும் முன் !
‘நான் சுத்தம் செய்கிறேனே’!
என்று சொன்னாலே போதும்!
உன் முகத்தில்!
என் முகம் பார்க்கும் !
மாயக்கண்ணாடியைப் போல!
நானே அதை மாற்றிடுவேன்.!
அதிகாரத்தை விட அன்பு!
எத்தனை சக்தி வாய்ந்த்து

இரா.சி. சுந்தரமயில்