நகைச்சுவையாய் நாலுவரி!
பேசியிருப்போம் !
அதற்குள் காதல் எப்படி வந்தது ? !
உறவு என்பதனால் உன்னுடன் நான் !
கொஞ்சம் உரிமை அதிகம் எடுத்துவிட்டேன் !
அது காதல் வானத்தினில் !
பறக்க வைத்தததுவோ ? !
வெந்துபோயிருந்த என் உள்ளத்திற்கு !
மயிலிறகால் வருடின உன் வார்த்தைகள் !
துவண்டிருந்த என்னை !
துடிப்பாக மாற்றின உன் வரிகள் - நான் !
புதிதாய் பிறந்தேன் அன்பே !
உனக்காய் என்னை மாற்றிக்கொண்டே !
நாம் இணைவோம் என்பது !
எனக்கு இன்னும் உறுதி இல்லை !
அதனால்தான் நிழலில் இணைத்துக்கொண்டேன் !
நிழல் இணைந்துவிட்டால் இனி !
நிஐம் இணைவதை யாரும் தடுக்கமுடியாது !
அலைபாய்கின்றது உள்ளம் !
அதன் கட்டுத்தறி பொட்டித்தெறித்ததாலோ !
இரு கரங்களில் பல சொந்தங்கள் !
தராசின் ஒரு தட்டில் நீ !
மறுதட்டில் இரத்த உறவு !
அதுவா இதுவா என !
புரிந்துகொள்ள முடியவில்லை !
ஓன்றை இழந்தால் !
இன்னொன்று கிடைக்கும் !
எதை இழப்பது !
பாலு£ட்டி சீராட்டி !
பக்கத்தில் இருந்த பசியாற்றி !
ஆயிரம் கதைகள் சொல்லி !
அன்பால் என்னை மெழுகி !
இன்றுவரை எனக்காக இருப்பவர்களையா ? !
அரைநொடியில் என்னை அசைத்துவிட்டு !
எனக்குள்ளே இறங்கிசென்ற !
ஏதொவொரு புரியாத உணர்வை !
விதைத்த உன்னையா ? !
பதில் சொல் . . !
எது பொ¤தென்று எனக்குத்தொ¤யவில்லை !
இரண்டு கண்களில் ஒன்றைக்கேட்டால் !
எதை சொல்வது !
இதயம் ஓன்றுதானே !
அதை இரட்டையாக்குவது எப்படி ? !
இன்னமும் என் தராசுத்தட்டு !
சமனாகவே
ந.பரணீதரன்