================ !
- வேதா மஹலஷ்மி !
எப்படி இருக்கே? !
அம்மா அப்பா நலமா? !
அண்ணன் சௌக்கியமா? !
ஊர் கதை என்ன? !
நண்பனைப் பார்த்தாயா? !
உன்னை மறந்தே போனேன்... !
எல்லாம் சுகம்தானே?? !
.................. !
கேட்கும் மற்றவர்க்குத் தெரியாது, !
இறந்த உறவும் இருந்த உறவும் !
திடீரென்று ஓர் இரவில் !
'இல்லை' என்றானது... !
எனக்கு, எல்லாமே..இனி !
நீயென்றாகிப் போனது
வேதா மஹாலஷ்மி