எங்கே போகிறது?.. பனி விளையாட்டு
வேதா. இலங்காதிலகம்
எங்கே போகிறது உலகம்?.. பனி விளையாட்டு!
01.!
எங்கே போகிறது உலகம்?!
------------------------------------!
அன்பின் தழுவலற்ற மழலைகள்!
ஏக்க சமுத்திரத்தில் அல்லாடஇ!
அன்பாலிணைந்த இன்ப ஜோடிகள்!
வாழ்வுக்காய் மௌன விசும்பலுடன்இ!
சினமடக்கிய பூமியாய் துணைகள்!
சின்ன வாரிசுகளுடன் ஒற்றைக்காற்தவம்.!
முன்னோர் தர்மங்களைப் புரட்டி!
எறிந்த மனிதக் கூட்டம்.!
விண்தொடும் வியத்தகு தொழில்!
நுட்பத்தில் விஞ்ஞானக் குழந்தை.!
கண்மயக்கும் அடுக்கு மாடிகளைக்!
கண்முன்னே பொலபொலவென!
நொறுக்கும் உடைந்த மனிதன்.!
உன்னத மானுடப் பிறவியை!
அங்கவீனர் ஆக்குவோராய் உலகம்!
கண்ணிழந்த மானுடராய்ப் புவியில்.!
திருவுடை அன்பு வட்டத்தால்!
விலகி தனியாய்- குழுவாய்!
உருவாக்கிய மனச்சிலந்தியின் பசையில்!
சிக்கிஇ அல்லாடிஇ பின்னப்பட்டு!
பெருகும் பயமற்ற அமிலத்தில்!
தோய்ந்து ஊறிய மனிதன்.!
பொங்கும் சுயநல விநோத!
உருவில் ஆறறிவாளன் மனிதன்!!
பூங்காவனம் உலகென்பதை மறக்கிறான்!
தொங்கும் வன்முறை நூலாம்படைகள்!
தேங்கிய நரகக்குழியாக்கி உலகில்!
தங்க மனிதனெங்கே போகிறான்!!
எங்களுலகமிங்குதானிங்குதான்! தானே சுற்றி!
பங்கமின்றிக் கதிரவனையும் சுற்றும் !
எங்கள் உலகம் எங்கள் கையிலே!!
அமைதியைக் கைப்பற்றுதல் எமதுகடன்!!
02.!
பனி விளையாட்டு!
----------------------------!
பொல பொலவெனப் பொழிந்த பனி!
பளபளவென ஒளிர்ந்தது சூரியனால்.!
வெடவெடவென நடுங்கினார் பலர்.!
துருதுருவென சிறுவர் நாம்!
குடுகுடுவென வெளியே ஓடினோம்.!
சர்சர் என பனியில் சறுக்கினோம்.!
தடதடவென ஓடி ஆடினோம்.!
கலகலத்த சிரிப்பும் கும்மாளமாய்.!
பூப்பூவான பனி விளையாட்டில்!
சொதசொதவென நனைந்தோம் செப்பமாய்.!
தொணதொணத்தாள் அம்மா போதுமென.!
சிடுசிடுத்துக் குசுனியுள் சென்றாள்.!
சுடச்சுடத் தேனீர் தந்தாள்.!
கதகதக்கும் வீட்டு வெப்பமும்!
கமகமக்கும் அம்மாவின் உணவும்!
சுறுசுறுப்புத் தந்தது எமக்கும்