கனடாவிலிருந்து பவித்திரா- !
அன்புடன் அறிவுசால் ஆன்றுடைத் தமிழகமே! !
அணிதிரண்டு நின்றீரே இமாலய வடிவத்தில்! !
இன்புறத் திளைத்திட, இனியதமி ழோங்கிட !
எஞ்ஞான்றும் தலைநிமிர்ந்து தமிழினம் வாழ்ந்திட !
மண்ணும் மக்கள் மன்றங்களா யிணைந்து !
மாபெரும் போராட்டம் நடத்தியே என்றும் !
பன்னுதற் கரியநல் பணியினை ஆற்றிப் !
பாரினில் எம்முடன் பிறப்பெனக் காட்டினீர்! !
நன்றியென்ற மூன்றெழுத்தில் நம்முறவு முடிவதல்ல !
நனிஉயர் உடல்நிறை குருதியால் நாமொன்றே! !
கன்றென நாமிருக்க நாவினால் நீவிடும்; !
கருணைமிகு பசுவாய்க் கருத்திலுமைக் கொள்வோம்! !
சென்றடையும் பாதையது தூரமில்லை காண்போம்! !
சிந்தையிலே தமழீழம் முடிவெனக் கொள்வோம்! !
ஒன்றிணைவோம்! உலகெங்கும் உரத்துச் சத்தமிட்டு !
உரிமைதனை நிலைநிறுத்த ஒருமனதாய் இயங்கிடுவோம்! !
பண்பால், படிப்பால், பக்குவத்தால் உயர்ந்து !
பாரினில் எழிலுடன் திகழும் சொந்தங்களே! !
உண்மை உறவினை உணர்வினாற் காட்டியே !
உலகில் ஈழத்தவன் தனித்தவன் அல்லன்என !
எண்பித்தீர்! என்னருமைத் தமிழகமே! நாம், !
எஞ்ஞான்றும் இசைந்து இலங்கிடுவோம் வாழ்வில்! !
கண்ணென வளர்ப்போம்! கன்னியாம் தமிழழகை! !
காசினி யெங்கும் கமழ்ந்திடச் செய்வோம்! !
ஈழத் தமிழனின் இன்னல்களிற் றிளைத்து !
இருட்டறை இரும்புக் கூட்டினுள் இடர்ப்பட்டு !
வழும் காவலர்தம் அடிகள் உதைகளிற் !
சுகத்தைப் பலத்தை முற்றாய் இழந்து !
வாழும் நாட்களை வீணே சிறையில் !
வாடிக் கழித்தீர் வண்டமிழ் உறவினரே! !
நாளும் நினைத்தே வாழ்வோம் இனிதே! !
நலமே காண்போம் நிறைதமி ழீழத்தில்! !
இனவாத அழிவினில் இடர்ப்பட்டு நாமிருக்க !
இந்தியா எமக்குதவ வேண்டுமெனக் குரலெழுப்பி, !
மனமொத்து உண்ணா விரதங்க ளிருந்துமே !
மானமிகு தமிழராய்த் தீக்குளித்து நின்று, !
சினம்கொள் சிங்களத்தின் செருக்கினை அடக்கிடச் !
சீர்மிகு தொண்டராய்த் திரண்டு ஈழத்திற்குக் !
கனதியாய்ப் புறப்பட்டடீர் காசினியில் எம்துயரம் !
கருத்தினில் எடுத்திடக் காரணமாய் நின்றீர்! !
அய்யன்மீர் தங்கள் ஒன்றுபட்ட எழுச்சியினால் !
அகிலமே அதிர்ந்து ஆட்டமுற்று நிற்கிறது! !
மெய்யன்பில் நீர்புரிந்த மிக்கவுயர்; பரப்புரையால் !
மேதினியிற் தமிழினத்தின் தீரம் துலங்குகிறது! !
பொய்யல்ல புகழுரையும் இவையல்ல எம் !
புத்துணர்வின் வெளிப்பாட்டிற் போற்றிடும் வார்த்தைகளே! !
துய்யதமி ழன்னைதன் பிள்ளைகளின் நிமிர்வில் !
தண்முகம் துலங்கியே தரணியில் ஓளிர்கிறாள்! !
காலங்கள் தோறும் கண்ணீரிற் குளித்தோம்! !
கலக்கமும் துயரமும் நிறைந்து வாழ்ந்தோம்! !
ஞாலத்தில் நமக்கென யாருமில் லையென !
நாடோறம் வருத்திய எண்ணமது நீங்கியே !
காலத்தால் அழியாத வரலாறு வரைந்திடவே !
காத்திரமாய் எமக்கொரு வாய்ப்பினை அளித்தீர்! !
சாலவும் நன்றியாய் நடந்துமே நன்கு !
தாகம்தீர் இளநீர்தரு தென்னையெனத் திகழ்வோம்! !
அன்புடன எம்மிடர்கள்! முரண்பட்டு நிற்குமும் !
மத்திய அரசது மாறுபட்டு நிற்கிறது! !
கடிதென அறிந்தோம் கையளிப்பு நாடகங்கள் !
கணக்கிலா ஆயுதக் கொடுப்புக்கள் தெரிந்தோம்! !
கொடிதன்றோ? அவர்செயல் கூடியே எதிர்த்திடுவீர்! !
கூர்மையான தரவுகளால் நியாயப் படுத்திடுவீர்! !
துடிப்புடன் எழுச்சிகள் தொடர்ந்திடின் ஆள்வோர் !
தூயதமி ழகத்தை விஞ்சிட அஞ்சுவரே
பவித்திரா