நினைவுகளின் ஆழ்ந்த கடலுக்குள்!
ஒரு நீரோடையாய்!
நினைத்துப்பார்க்கவும்!
விரும்பாத சில நிகழ்வுகள்...!
தொடர்ந்து ஓடிக்கொண்டே!
இருக்கின்றன...!
நீரோடையின் கரைகளை!
நிகழ்காலத்தின் ஏதோவொரு முனை!
எப்போதும் தொட்டுக்கொண்டே!
இருக்கிறது...!
தூக்கம் தொலைந்த!
அடர்ந்த இரவுகளில்!
தலையணைக்குள் புதையும்!
விசும்பல்கள்!
நீரோடை பற்றிய குறிப்புகளை!
வாசித்தபடி இருக்கின்றன...!
காலப்புத்தகத்தில்!
அந்த இரவுக்குரிய!
பக்கத்தின் வரிகளை!
கட்டாயமாய் படிக்க வேண்டிய!
நிர்பந்தம் அந்த கண்விழிப்பிற்கு
ராம்ப்ரசாத், சென்னை