பிறந்த நாள்முதலாய்!
பெயரறியாப் பழமொன்றைக்!
கையில் பிடித்தபடி நிற்கிறாள்!
முந்தானை நழுவிய!
பெண்ணொருத்தி,!
என் அறை சுவற்றில்...!
பெயரறியா பழமோ,!
நழுவிய முந்தானையோ!
அள்ளிக்கொள்ளாத என் கவனங்களை!
மிகக் கவனமாய் சேகரிக்கின்ற!
அவளின் கண்களில்!
என்னை பார்த்துச் சிரிக்கிறான்!
அவளின் பிரம்மன்
ராம்ப்ரசாத், சென்னை