அஸ்தமனத்திற்கு பின்பான!
விடியல்கள்,!
ஒரு விருப்பத்துடனோ அல்லது!
ஒரு நிர்பந்தத்துடனோ!
நிராகரிக்கப்படவே செய்கின்றன....!
உயிரை விடவும்!
பெரியதாகிவிடுகிறது!
ஏதோ ஒன்று...!
முட்டுச்சந்துகளில்!
முட்டிக்கொள்ளுகின்ற வாழ்க்கையை!
பெருந்துணிச்சலொன்று!
இட்டுச் செல்லுகிறது!
அஸ்தமனத்தை நோக்கி...!
இட்டுச் செல்லும்!
வழியெங்கும் அது!
விடியல்களைப் பற்றி!
அவதூராகவே பேசுகிறது...!
விடியல்களின் வெம்மையை!
தாங்காத மனம்!
அஸ்தமன இருளில்!
புதைவதை வேறு வழியின்றி!
ஏற்கிறது...!
பாதையைப் பொறுத்தே!
அமைந்து தொலைகின்றன!
இந்த முட்டுச்சந்துகள்...!
புதிய பாதைகளில்!
முட்டுச்சந்துகளை!
அவதானிக்க முடிவதில்லை
ராம்ப்ரசாத், சென்னை