மழை உதிர்த்த - செந்தமிழ், சென்னை

Photo by Pawel Czerwinski on Unsplash

மழை உதிர்த்த !
காலைப்பொழுதொன்றில்!
திடீரெனத் தோன்றினாய்!
உன்னைக்கொல்ல ஆயத்தமாகிறார்கள்!
உடலைத் துளைத்துச் செல்ல!
துப்பாக்கியும் குண்டுகளும் தேவைப்படவில்லை!
அறுபட்டுக் கூறுகளாக்க!
கூர்கத்தியும்...!
எரித்துச் சாம்பலாக்கத் !
ஒரு குச்சி நெருப்பும்...!
அணுஅணுவாய் உயிரெடுக்க!
துளி விஷமும்...!
தேவைப்படாமல்!
சமையறைச் சம்புடத்தில்!
துளி உப்பெடுத்து...!
தரையைக் கெட்டியாகப் பிடித்திருந்த !
கால்களற்ற உன் (அட்டை) உடல்!
ஒரு பிசிறும் மிஞ்சாமல் !
கரைந்துபோகிறது காற்றோடு!
அவர்களின் மனசாட்சியைப்போல!
செந்தமிழ், சென்னை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.