உயர் சாதிக்காரன் !
தாழ்த்திக் காட்டும்!
நிழல்!!
சாதிக் கோடரிகள்!
மோதிக் கொண்டன!
இரத்தம் குடிக்கும் நரி!!
உறக்கத்தில் உடல்!
விழிப்பில் உள்மனம்!
கனவுத் தொழிற்சாலை!!
ஆட்கள் கடத்தல்!
உறுப்புகள் களவாடல்!
க(உ)ருப்புச் சந்தை!!
புரட்சிகளை வெடிக்கும்!
போர்களை முடிக்கும்!
பேனா முனை!!
மிருகச் சாவு கண்டனம்!
மனிதச் சாவு வேடிக்கை!
உலக அதிசயம்!!
உள்ளங்கையில் அரிப்பு!
பண வருமானம் தான்!
மருத்துவருக்கு!!
என்னால் நிறையும் கடல்!
நதியின் திமிர்ப்பேச்சு!
நகைசிந்தும் அருவி!!
ஆசிரியர் வாக்கு பலித்தது!
அரபு நாடுகளில்!
ஆடு மேய்க்கும் தொழில்.!
ஆயிரம் கனவுகள்!
இலட்சங்கள் சம்பாதிக்க!
பாலைவன வாழ்க்கை!!
!
-இமாம்.கவுஸ் மொய்தீன்

இமாம்.கவுஸ் மொய்தீன்