சும்மா கிடைத்ததல்ல.. பிணமென்றே - வித்யாசாகர்

Photo by FLY:D on Unsplash

சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்.. பிணமென்றே பெயர் வைத்தேன்!
!
01.!
சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்!
---------------------------------------!
விடுதலையென்று சொன்னாலே நெருப்பில் சுட்ட கோபம்வரும்!
சுதந்திரமென்று கேட்டாலே சொத்து பறித்த பயம்வரும்!
உரிமையென்று பேசினாலே விரட்டியடித்த வெள்ளையனை!
திருப்பியடித்த தமிழனுக்கு ஒற்றுமை தந்தது; சுதந்திரம்!!
உயிரென்று சொன்னாலே அந்நியன்னு பேராச்சு!
பிணமென்று சொன்னாலே இந்தியன்னு ஊர்பேச்சு!
மனிதனென்று சொன்னாலே மதிக்காத வெள்ளையனை!
விரட்டியடிச்ச தமிழனுக்கு வீரம் தந்தது; சுதந்திரம்!!
அடிமையாக்கி வைத்தவனை இருநூறு வருடம் தாங்கியாச்சு!
உறவெல்லாம் சுட்டவனை ஒசத்தியாக்கி பார்த்தாச்சு!
உடமையெல்லாம் இழந்தாலும் -!
எதிர்த்துநின்ற தமிழனுக்கு துணிவு தந்தது; சுதந்திரம்!
மார்தட்டி ஊரொழிச்ச கதையுண்டு - பார்த்தாச்சி!
காதலிச்சும் ஊர் பிடிச்ச கதையுண்டு - பார்த்தாச்சி!
யாரடிச்சு யார் மாண்டுபோயினும் - எவனடிச்சும் சாகா தமிழனுக்கு!
எழுச்சிக் கவிதைகள் கொடுத்தது; சுதந்திரம்!!
பெண்ணென்றால் போகமென்றே வாழ்ந்தவனும்!
அடுப்பூதி சமைப்பவளுக்கு படிப்பேனெனக் கேட்டவனும்!
வைப்பாட்டி வைத்திருந்தாலும் வாரிசை மட்டும் வளர்த்தவனும்!
திடுக்கிட நிமிர்ந்திட்ட பெண்ணின் பலத்திற்குமாய்!
சேர்த்துக் கிடைத்தது; சுதந்திரம்!!
உயிருக்கெல்லாம் மண்ணென்ற விலைவைத்து!
மன்னிற்கெல்லாம் ஆங்கிலத்தில் பெயர்வைத்து!
ஆடைமுதல் சோறுவரை மாற்றிவிட்ட வெள்ளையனால்!
மாறாத பழைய தமிழனின் மானம் தந்தது; சுதந்திரம்!!
காக்கை குருவி போல் சுட்டு சுட்டு எறிந்த!
வெள்ளையனுக்கு, இறக்கப் போகிறோமெனத் தெரிந்தும்!
மார்பை திருப்பிக் காட்டிய தமிழனின்!
தியாகத்திற்குக் கிடைத்தது; சுதந்திரம்!!
ரத்தநெடி மூக்கு சுரண்டி; செத்தபிணம் செவிட்டில் அறைந்து!
முடங்கிக் கிடந்த சோம்பேறி இளைஞனை!
அடிமை அடிமை என்ற ஓர்சொல்!
அடங்கமருத்து அடங்கமருத்துக் பெற்றது; சுதந்திரம்!!
வீட்டில் உறங்ககூட ஊரான் தடுத்ததை எதிர்த்து!
வீட்டில் விளைந்ததைகூட ஊரான் பறித்ததை எதிர்த்து!
வீட்டில் பேசக்கூட ஊரான் மறுத்ததைஎதிர்த்து!
என் வீட்டு தொழுவத்தில் எவன் மாடோ செனையானதை!
எதிர்த்து எதிர்த்து எதிர்த்து கிடைத்தது சுதந்திரம்;!
சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்!!!
!
02.!
பிணமென்றே பெயர் வைத்தேன்!
----------------------------------------!
பிணங்களின் எரியும் புகையில்!
புகுகிறது பள்ளி சீருடைகள்!
பிணங்களின் அழுகிய நாற்றத்தில்!
மறந்தன மரண பயம்!
பிணங்களின் முறிந்த உறுப்பில்!
முடங்கின உயிர் பறித்த வலி!
பிணங்களின் தெருவோர குவியலில்!
அறுந்தன உயிரின் ஆசை!
பிணங்களின் பிணமென்னும் பெயரில்!
கிடக்கின்றன எம் - வீரமும் உறவுகளும்!
பிணமென்றே பெயர்வைத்தேன்!
வேறென்ன எம்மக்கள் -!
பிணமாகிப் போகவே படைத்தாயே? !
வெடித்த குண்டுகள் வீரம் பேச !
உழைத்த உழைப்பெல்லாம் மண்ணாய் போக!
பயமும் கதறலுமாய் பதறித் திரிந்த உடம்புகளில் -!
ஈக்கள் மொய்க்க..!
எலும்பு கடித்து நாய்கள் திரிய..,!
உடம்பு காட்டி என் தமிழச்சிகள் கருக..,!
வெட்டிசாய்த்த மரம் போல -!
எம்மக்கள் வீழ்ந்து குவிந்திருப்பதை கண்டாயோ?!
பற்றி எரிகிறது மனம்!
வெறும் படமென்று எண்ணி!
உச்சு கொட்டி போகிறது உலகம்!
மறந்தோர் மறந்து!
வலித்த உணர்வுகளையும் தொலைத்து!
மிச்சம் மீதிக்காய் அழுது -!
வெறும் வரலாற்றில் கணக்காகிப் போயினறே என்மக்கள்!
வேறென்ன சொல்ல எமை -!
முடிவில் -!
பிணமென்றே பெயர் வைத்தேன்- அதில்!
என்னையும் பூட்டிவைத்தேன்
வித்யாசாகர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.