தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அழுக்காய்.. விழிகளே

யசோதா காந்த்
அழுக்காய் ஒரு தேவதை..விழிகளே!
01.!
அழுக்காய் ஒரு தேவதை !
----------------------------------------!
அன்றும் பேருந்தில் !
குட்டி தேவதை ஒன்று !
அழுக்கு ஆடை உடுத்தி !
தலை முடிகள் பறந்து கிடக்க!
கைகளிலோ பிச்சை தட்டுமாய் !
திரைப்பட பாடல் ஒன்றை !
பிழையுடன் உரக்க பாடியபடி !
வயிற்றில் அடித்துக்கொண்டு !
அங்கும் இங்கும் ஓடி !
யாசித்தபடி !
காதில் தேனாக ஒலித்தது!
அந்த குயிலின் குட்டி குரல்!
!
பட்டுடை அணிந்து !
தலையில் பூக்கள் சூடி !
கானமேடை ஒன்றின் மேல் அமர்ந்து !
தாளம் தட்டி தலை அசைத்து !
இவள் பாடும் அழகை !
கண் முன் நிறுத்தி கண்டேன் !
காதருகே அதே குரல் !
கண் திறந்த போதோ !
மீண்டும் அதே வரிகளை பாடி !
என்னருகே கையேந்தியபடி!
அந்த சின்ன அழுக்கு தேவதை !
நெஞ்சில் வலியுடன் !
சட்டைப்பைக்குள் என் விரல்கள்!
02.!
விழிகளே!
---------------------!
எனது விழிகளே !
பலமுறை வேண்டியும் !
பயனில்லை உங்களிடம்!
மனதின் மர்மங்களை !
அம்பலபடுத்தும் ஆயுதங்களே !
அடிமைபோல் கேட்கிறேன் !
உணர்ச்சிகளை உள்ளுக்குள் !
வையுங்கள் !
நான் காதலில் தோற்கவில்லை !
கவலைகள் எனக்கில்லை !
பயம் என்பது என்னில் இல்லை !
பகைமையோ எனக்குள் இல்லை !
பிரிவுகள் கருதி கலங்குவதுமில்லை !
இத்தனையும் காட்டாது !
இமை மூடி கொள்ளுங்கள் !
வலிகள் பலவகை வருவினும் !
விழிநீர் வடிக்காதீர்கள் !
விசும்பலுடன் விண்ணபிக்கிறேன் !
எனது விழிகளே

குணாம்சம்... மலிவாய் கிடைப்பன

தஸ்லீமா நஸ் ரீன்
குணாம்சம்!
-------------------!
நீயொரு பெண்!
இதை நீ மறக்காமலிருத்தல் நன்று!
வீட்டின் படியைத் தாண்டியதும்!
ஆண்கள் சந்தேகப் பார்வை பார்ப்பர்.!
சாலையில் இறங்கி நீ நடக்கையில்!
உன்னைத் தொடர்ந்து விசிலடிப்பர் ஆண்கள்!
சாலையைக் கடந்து முக்கிய சாலையில் இறங்குகையில்!
உன் மீது அவதூறு சொல்வார்கள், பைய்த்தியம் என்பார்கள்!
உனக்கென்று குணமில்லை என்றால்!
நீ திரும்பி விடுவாய்!
உனக்கென குணமிருந்தால்!
நீ நடந்து கடந்து கொண்டிருப்பாய்!
இப்பொழுது போய்க் கொண்டிருப்பதைப் போல!
--------------------------------------!
!
மலிவாய் கிடைப்பன!
------------------------ !
சந்தையில் பெண்களை விட மலிவாய் ஏதுமில்லை!
அவர்களுக்கு சாய புட்டிகள் கொடுத்துவிட்டால்!
மகிழ்ச்சியில் தூக்கம் விலக்குவார்கள் இரவெல்லாம்!
அவர்கள் தோலில் தேய்க்க சோப்புக் கட்டிகளும்!
அவர்கள் மயிர்களில் தேய்க்க வாசனை எண்ணெயும்!
கொடுத்துவிட்டால் அடிமையாகி விடுவார்கள்!
அவர்கள் மாமிச திட்டுகளை அள்ளி!
வாரமிருமுறை சந்தையில் விற்க தயாராகி விடுவார்கள்!
அவர்கள் மூக்கிற்கு நகை கிடைத்து விட்டால்!
எழுபது நாட்களுக்கும் மேலாக கால் நக்குவார்கள்!
ஒரு சுற்றுச் சேலை என்றால்!
மூன்றரை மாதங்களுக்கு தொடர்வார்கள்!
கரும்புள்ளிகள் கொண்ட வீட்டு நாய் கூட !
எப்பொழுதாவது குரைத்து விடும்!
ஆனால் மலிவாய் வாங்கப் பட்ட பெண்களின் !
வாயில் பூட்டு!
தங்கப் பூட்டு!
தஸ்லீமா நஸ் ரீன்

என்னிடம் எல்லாம் உண்டு

மணி சரவணன்
கண்ணை தெரியாத!
இமையும் இல்லை!
இமையை தெரியாத!
கண்ணும் இல்லை!
ஆனால்!
பார்வையற்றோருக்கு தெரியவில்லை!
பற்கள் காணாத நாக்கு இல்லை!
நாக்கை காணாத வாய் இல்லை!
இருந்தும்!
ஊமையால் பேசமுடியவில்லை!
இதயம் இல்லாத மனசு இல்லை!
மனசு இல்லாத இதயம் இல்லை!
இருந்தும் மூளையற்றவருக்கு என்னபயன்?!
என்னிடம் எல்லாம்!
சரியாகவே இருக்கின்றன!
இரண்டு கையும் காலையும் தவிர...!
!
கவி: மணி சரவணன்!
006592414166

தமிழே உயிரே

இரா.ச.கோகுல் நந்தகுமார்
ஆதியில்லா பொருள் இரண்டு!
ஒன்று கடவுள்!
மற்றொன்று கன்னித்தமிழ்!!
கடவுளுடன் கண்ணாமூச்சியாட!
கையாளாகா விதி!
அன்னைத் தமிழுடன்!
ஆடிப்பார்க்க!
ஆசையெடுத்தது!!
தமிழும் தமிழரும்!
கருக்கொண்டு உருவாகி!
தரணிக்கே நல்தருவென!
தலைத்திருந்த!
லெமூரியாவென்னும்!
குமரிக் கண்டத்தை!
குலுக்கியெடுத்தது!!
நிலமுத்தென வாழ்ந்த!
நற்றமிழரை!
கடற்முத்துடன்!
கலக்கிக் களித்தது!!
அமிழ்தொப்பும்!
எம்தமிழ் நூல்களை!
கடலில் கரைத்து!
கடலின் உவர்ப்பைக் குறைத்தது!!
தமிழ் சங்கம்தனை!
சமுத்திரம் கொண்டாலும்!
சலைக்காத எம்தமிழர்!
புது சரித்திரம் கண்டார்!
சோழ சேர பாண்டியர்!
தரணியை வென்றார்!!
தமிழன் நிலத்தை!
கடல் கொண்டது - ஆனால்!
தமிழன் இமயவரம்பை கொண்டான்!
அதனினும் உயர்ந்து நின்றான்!!
முதற் முயற்சியில் தோற்றாலும்!
கலங்கிப் போகவில்லை!
கஜினி முகம்மதுவின் முப்பாட்டன் விதி!!
களப்பிரர் அனுப்பி!
கலகம் செய்து பார்த்தது!!
தமிழுக்குத் தாத்தா!
வடமொழியென!
புதுக்கரடி விட்டது!!
வடமொழி ஆதி!
அதில் நீ பாதி!
என வாய்ஜாலம் செய்தது!!
தமிழ் மன்னர் மதி மயக்கி!
அவர் இயற்ப்பெயர் இறக்கி!
பின்!
அரியனையும் இறக்கியது!!
தமிழன் கட்டிய கோயிலில்!
தமிழுக்குத் தடை!
தமிழர்க்கு இடமாற்றம்!
கடவுளுக்கும் பெயர் மாற்றம்!!
மாற்றாரை அனுப்பி!
தமிழ் நிலம் பரப்பி!
தமிழரை!
ஏவலராக்கி!
ஏமாற்றி மகிழ்ந்தது!!
கப்பலில் ஏற்றி!
கானகம் செலுத்தி-அங்கே!
கரும்புத் தோட்டத்தில்!
எம் கன்னியர் கற்பை!
கரும்புச் சக்கையாய்!
கசக்கி எடுத்தது!!
தமிழனை!
கயவனாய் கள்வனாய்!
அரக்கனாய் அயோக்கியனாய்!
சாத்திரம் செய்து வைத்தது!!
தேடித் தேடி!
வடமொழிப் பெயர் சூடி!
எம்தமிழன் மகிழ்ந்திருக்க!
அவன் வீட்டு மொழியாய்!
ஆங்கிலம் அமர்த்தியது!!
முல்லைக்காட்டில்!
பள்ளாங்குளியாடும் பருவத்தில் நங்கையர்!
பதுங்குகுழி தோண்டுகின்றார்!
ஏர்பிடித்த கைகளில்!
AK-47!!
உலகெங்கும் கூலியாய்!
தமிழன்!!
கூலியின் மொழியாய்!
தமிழ்!!
ஆனாலும் தமிழா!
கலங்காதே!!
இந்த காரிருள்!
தமிழ் பரிதியின் முன்!
பனியாய் மாயும்!
பொற்காலம் மீண்டும் வரும்!
தரணியின் அரியணை!
தமிழன் தாங்கும்!!
வாழ்க தமிழ்!!!!
- இரா.ச.கோகுல் நந்தகுமார்

உனக்கொன்று சொல்வேன்

சத்தி சக்திதாசன்
சக்தி சக்திதாசன்!
கைகளில் கலப்பையும்!
கண்களில் ஏக்கமும்!
கால்களில் தயக்கமும்!
கலங்களில் வெறுமையும்!
பகலினில் வியர்வை!
இரவினில் கண்ணீர்!
இவர்களின் வாழ்க்கை!
இயற்கையின் கொடுமை!
வீதியில் படுக்கை - தெரு!
விளக்கினில் படிப்பு!
விடியுமா இவர் வாழ்வு ?!
விளக்குவார் யார் உலகில் ?!
ஆயிரம் கட்சிகள்!
ஆளுக்கோர் கோஷங்கள்!
அரசியல் வியாபாரம் - பாவம்!
அரிசியில்லா உலைகள்!
நேற்றும் அழுதனர்!
இன்றும் அழுகின்றார்!
நாளை அவர் வாழ்வில் ...?!
நடக்கட்டும் மேதினம்!
உனக்கொன்று சொல்வேன்!
உள்ளதைச் சொல்வேன்!
உலகத்தார் நெஞ்சத்தில்!
உண்மை விழிக்கு தினமே!
உண்மையான மேதினம்

நிம்மதி

தென்றல்.இரா.சம்பத்
1. நிம்மதி!
=============!
நீ....!
தீயானபோதும் !
நான்...உன்னோடுதான்.....!
நீ....!
நீரானபோதும்!
நான் உன்னோடுதான்...!
நீ....!
எதுவானால் என்ன!
உன்னோடு !
இருந்தாலே போதும்...!
என் வாழ்க்கை பூர்த்தியாகிவிடும்...!
தென்றல் இரா.சம்பத்!
ஈரோடு-2!
94435-46100

ஒழுக்கமே உயர்வு தரும்

இரா.இரவி
ஒழுக்கமாக வாழும் வாழ்க்கை தவம்!
ஒழுக்கம் கெட்டு வாழும் வாழ்க்கை சவம்!
ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப் பண்பாட்டை!
உலகிற்கு பறைசாற்றியது நமது தமிழகம்!
கற்பை இருபாலருக்கும் பொதுவில் வைப்போம்!
கற்பித்தான் முண்டாசுக்கவி பாரதி!
ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக உயர்த்தினார்!
உலகப் பொதுமறை படைத்த திருவள்ளுவர்!
கல்விக்கு இரண்டாம் இடம் தந்தார்!
ஒழுக்கத்திற்கு முதல் இடம் தந்தார் திருவள்ளுவர்!
வெள்ளை காகிதத்தில் சிறு கரும்புள்ளி இருந்தால்!
கரும்புள்ளி மட்டுமே கண்ணில் படும்!
எத்துணை பெருமைகள், திறமைகள் இருந்தாலும்!
ஒழுக்கம் இல்லை என்றால் மதிப்பதில்லை யாரும்!
நல்ல பெயர் வாங்குவது மிகவும் கடினம்!
கெட்ட பெயரை விரைவாக பெற்றுத்தரும் ஒழுக்கக்கேடு!
கண்ணகியும் சீதையும் ஒழுக்கமுடன் வாழ்ந்ததால்!
கணினியுகத்திலும் போற்றுகின்றோம் அவர்களை!
மாதவியும் சூர்ப்பநகையும் ஒழுக்கம் தவறியதால்!
மண்ணில் இன்றும் பழிக்கிறார்கள் அவர்களை!
இராமன் ஒழுக்கமுடன் வாழ்ந்ததால் கடவுள் ஆனான்!
இராவணன் ஒழுக்கம் தவறியதால் அரக்கன் ஆனான்!
பறவைகள் கூட ஒழுக்கத்தோடு வாழும் போது!
பகுத்தறி பெற்ற மனிதன் ஒழுக்கம் தவறலாமா?!
விலங்குகள் கூட ஒழுக்கத்தோடு வாழும்போது!
விவேகமான மனிதன் ஒழுக்கம் தவறலாமா?!
தவறு செய்ய வாய்ப்பு வந்த போதும்!
தவறு செய்யாமல் இருப்பவர்களே சிறந்தவர்கள்!
ஆறறிவு பெற்ற மனிதனுக்கு இன்று!
அவசியம் தேவை நல் ஒழுக்கம்!
ஒழுக்கத்தோடு வாழ்பவனுக்குப் பெயர்தான் மனிதன்!
ஒழுக்கம் தவறி வாழ்பவன் மனிதனா? சிந்தியுங்கள்!
இனிய ஒழுக்கம் தவறி நடப்பன் பெயர்!
இரண்டு கால் மிருகம் என்று உணர்!
மனம் போன போக்கில் வாழ்வது வாழ்வன்று!
மனத்தை கட்டுக்கோப்பில் வைத்து வாழ்வதே வாழ்வாகும்!
கணவன் ஒழுக்கத்தோடு வாழ்ந்து வந்தால்தான்!
மனைவியிடம் ஒழுக்கத்தை எதிர்பார்க்கும் உரிமை உண்டு!
கணவன் ஒழுக்கம் கெட்டு வாழ்ந்து கொண்டு!
மனைவியிடம் மட்டும் ஒழுக்கத்தை எதிர்பார்ப்பது மூடத்தனம்!
ஒழுக்கம் என்து பண்பாடு மட்டும் அன்று!
ஒழுக்கம் என்பது உயிர் சார்ந்தது இன்று!
நூற்றாண்டுகள் கடந்த பின்னும் நிலைத்தார்!
நம் காந்தியடிகள் காரணம் நல்ஒழுக்கம்!
கர்மவீரர் காமராசர் பிரம்மச்சாரியாக வாழ்ந்தார்!
கல்வி வள்ளல் ஒழுக்கச்சீலராக வாழ்ந்தார்.!
ஒருவருக்கு எல்லாம் இருந்தும் உயர்ந்த!
ஒழுக்கம் இல்லை என்றால் பயனில்லை!
ஒழுக்கம் இருந்து ஏழையாக இருந்தாலும்!
உயர்ந்த புகழ் தேடி வந்து சேரும்!
எய்ட்ஸ் நோய் கொடிய நோய் உயிர்க்கொல்லி நோய்!
ஒருவனுக்கு ஒருத்தி உணர்த்தவந்த உன்னதநோய்!
தமிழ்ப்பண்பாட்டை கடைபிடித்து நடந்தால்!
தரணியில் எய்ட்ஸை இல்லாமல் ஒழித்திடலாம்!
ஒழுக்கம் இல்லாததால் தான் இன்று!
உலகம் முழுவதும் பல்கிப் பெருகியது எய்ட்ஸ்!
ஒழுக்கம் இல்லாததால் தான் இன்று!
மேலை நாடுகளில் வன்முறை வளர்ந்தது!
மேலை நாட்டு நாகரீகத்தைக் கடைபிடித்ததால் தான்!
நம் நாட்டில் பண்பாடு சிதைந்தது!
உலகிற்கே விளக்காகத் திகழ்வது நம்நாடு!
பண்பாட்டுச் சீரழிவால் சிதைகின்றது நம்நாடு!
அந்நியரிடமுள்ள நல்ல பழக்கம் கடை பிடிப்போம்!
அந்நியரிடமுள்ள கெட்ட பழக்கம் விட்டொழிப்போம்!
உயிர் மேல் ஆசை இருந்தால்!
ஒழுக்கத்தோடு வாழ்வது நல்லது!
நீண்ட ஆயுள் வேண்டும் என்றால்!
நல்ஒழுக்கம் நாளும் வேண்டும்!
உடல்நலனுக்கு ஒழுக்கம் அவசியம்!
உள்ளம் நலனுக்கு உடல் நலம் அவசியம்!
நல்லவர்களைப் பாடமாகக் கொள்ளுங்கள்!
கெட்டவர்களை கவனிக்காமல் விட்டுவிடுங்கள்!
ஒழுக்கம் என்பது பால் போன்றது!
ஒழுக்கக்கேடு என்பது விசம் போன்றது!
ஒருகுடம் பாலில் ஒரு துளி விசம் கலந்தாலும் விசம்!
ஒழுக்கமாக வாழ்க்கையில் ஒருநிமிடம் சபலப்பட்டாலும் சஞ்சலம்!
இப்படித்தான் வாழவேண்டுமென்பது ஒழுக்கம்!
எப்படியும் வாழலாம் என்பது மூடப்பழக்கம்!
பகுத்தறிவைப் பயன்படுத்தி வாழ்வது மனித இனம்!
பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் வாழ்வது விலங்கினம்!
விலங்கை விலங்காக இருக்க வலியுறுத்துவதில்லை!
மனிதனை மனிதனாக இருக்க வலியுறுத்துவது ஒழுக்கம்!
உலகமே வியக்கும் உயர்ந்த நம்பண்பாடு!
ஒழுக்கத்தை போற்றிப் பாதுகாப்பது கண்கூடு!
எதை இழந்தாலும் திரும்ப பெற்றுவிடலாம்!
ஒழுக்கத்தை இழந்தால் எல்லாம் போய்விடும்!
நல்லவர் என்ற பெயரை பெற்றுத்தருவது!
நாடு போற்றும் நல்ஒழுக்கம் ஆகும்!
கோடிப்பணம் கொட்டிக்கிடந்தாலும்!
ஒழுக்கம் இல்லை என்றால் ஏழைதான் அவன்!
பணம் எதுவுமின்றி ஏழையாக இருந்தாலும்!
ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் அவன் குபேரன்தான்

எனக்கொரு குழந்தை பிறந்திருக்கிறது

தை.ரூசோ
புரியாத ஒரு பாடத்தை!
குறிப்பெடுத்துக்கொண்டிருந்த - ஒரு!
குருகிய காலத்தில் எனக்கொரு!
குழந்தை பிறந்திருக்கிறது - அந்த!
குறிப்பேட்டின் நடுப்பக்கத்தில்..!
எனக்கு பிறந்த குழந்தையை!
எல்லாருக்கும் எடுத்துக் காட்ட ஆசைதான்..!
ஆனால்..!
அது உனக்கு சோறுபோடாது என்று!
என் உடன்பிறந்தவர்களும்..!
அவள் எவள் என!
ஏளனம் செய்ய ஊராரும் காத்திருப்பர்..!
என் குழந்தையை!
எந்த பத்திரிக்கையும்!
பிரசுரம் செய்யாது..!
அதற்கு நான் சினிமாவிலோ..!
சங்கத்திலோ.. சேர்ந்து!
பாட்டெழுதியிருக்க வேண்டும்..!
இங்கே படைப்புகளுக்கு அல்ல..!
படைப்பாளிகளுக்கே முக்கியத்துவம்!
கொடுக்கப்படுகிறது..!
கருவிலுருந்த குழந்தையை!
மீண்டும் கருவுக்குள்ளே.. வைத்து!
திணித்து வைத்ததைப்போல..!
என் கவிதை காத்துக்கிடக்கிறது.!
அந்த குறிப்பேட்டின் நடுப்பக்கத்தில்

போரறிந்த சமாதானம்

ரவி (சுவிஸ்)
போர் கவிழ்ந்த எமது தேசத்தில் !
தளபதிகள் உருவாயினர் !
தத்துவவாதிகள் தோன்ற மறந்தனர் அல்லது !
மறுக்கப்பட்டனர். !
வரலாற்றை !
போராட்டம் நகர்த்திச் சென்றது !
ஆனாலும் நாம் !
அனுபவங்களும் சிந்தனைகளும் !
சேர்ந்து நடக்க !
தடைவிதித்தோம். !
மலிவாய் நாலு வார்த்தைகளுடனே !
வந்துவந்து !
செல்கிறான் என் சகோதரன் !
அழிவுகளின் பின்னான உயிர்ப்பொன்று !
இருக்குமெனின், !
அழிவை நாம் !
சகித்துக் கொள்ள வேண்டும் என்கிறான் என் !
நண்பன். !
இறந்துபோன இராணுவத்தினனின் கணக்கை !
ஓயாது கரைகிறது என் முற்றத்தில் !
தமிழ் வானொலி. !
இந்தக் கரைவினிடை, !
இரவோடு இரவாய் காணாமல் போனோர் !
கொலைசெய்யப்பட்டோர் தொகை !
தொடர்ந்தும் !
காணாமலே போய்க் கொண்டிருந்தது - !
காரணமும்கூட. !
இனந்தொ¤யாதோர் என்ற சொல் !
மீண்டும் மீண்டும் !
கொலைஞர்களின் ஆடையாகிறது. !
மனிதாபிமானத்துக்கு எல்லைகள் !
வரையப்பட்ட தேசமொன்றில் !
அனாதையாய்ப்போன குழந்தைக்கு !
கூடமைக்கவும் !
அனுமதி கேட்கவேண்டியதாயிற்று. !
கேள்விகேட்கப்பட முடியாத போராட்டம் !
துறவியிலும் தொற்றிய இனவெறி !
இதனிடை நாம் !
சமாதானத்துக்காகப் !
பயணித்தோம் மூன்றாம் தரப்பின் வாகனத்தில். !
உலகமெலாம் துப்பாக்கி உழவில் !
’ஐனநாயகத்தை’ விதைக்கும் !
மாமல்லர்களும் மூக்கை !
நுழைத்தாயிற்று !
இனி என்ன !
காத்திருப்போம் !
காத்திருப்போம் கால எல்லையின்றி. !
சமாதானம் !
போரின் இறப்பை மட்டுமே !
இலக்கு வைக்குமெனினும் அதுவாய் !
வருக. !
யுத்தக் களையில் மூச்சிரைக்கும் ஐ¦விக்கு !
சுவாசக் காற்றை கொண்டு வருக. !
தேய்ந்து நாம் !
கட்டெறும்பான கதையின் பின்னரும் !
பொரித்துக் கொள்வோம். !
-ரவி(சுவிஸ், 050803)

சுனாமிக்கு ஓர் அஞ்சலி

பாண்டூ
கணபதியே! கணபதியே! கணத்த கணபதியே! !
கடலிலே கரைச்சதாலே கடலும் பொங்கியதோ !! !
பொங்கலும் வருகுதுனு மார்கழி முடியுதுனு! !
பொங்கலோ பொங்கலென கடலும் பொங்கியதோ!! !
மழையா நீயழுதா மகிழ்ச்சி ஊருக்கெல்லாம்! !
அலையா நீசிரிச்ச அழுதோம் நாங்களெல்லாம்!! !
மூழ்கிய பேருக்கெல்லாம் முத்த நீகொடுத்த! !
முத்தான சொந்தங்கள ஏன் நீ மூழ்கடிச்ச!! !
கடும்விஷம் உனக்குளுண்டு கதையில் கேட்டதுண்டு!!
கக்கிய நஞ்சையின்று குடிக்க ஈசன்வல்ல!! !
உப்பாய் கரிச்சாலும் உறவுடன் கலந்திருந்தோம்! !
உப்பாய் எங்களது உயிரையும் கரைத்தாயே!! !
அஸ்தி கரைக்கவே ஆழ்கடலே வந்திருந்தோம்! !
ஆளையே கரைத்தயே யாரிடம் போய்ச்சொல்வோம்!! !
உணவுக்கு கடலம்மா உன்னைத்தான் நம்பியிருந்தோம்! !
உணவாய் எங்களையே உண்டதும் ஏன்தானோ!! !
கடலம்மா உன்மடியில் கரையில் கிடந்தோமே! !
கரைசேர்ப்பாய் என்றே கனவுகள் சுமந்தோமே!! !
இரைச்சலோடு வந்தே இரையாக்கிப் போனாயே! !
உரிமையோடு வந்தே உணவாக்கிப் போனாயே!! !
சூரியோதயம் பார்க்கவே வழ்ந்துதான் இருந்தோமே!!
அஸ்தமனம் ஆக்கியே ஆகாதவனாய்ப் போனாயே!!!
மூழ்கிய சூரியனும் முழுதாய் காலைவரும்! !
மூழ்கிய வாழ்க்கையையும் மனிதம் மீட்டுத்தரும்!! !
!
------------------------------------- !
பாண்டூ !
ஸ்ரா சக்தி கணபதி டிரேடர்ஸ் !
6 ஜவுளிக் கடைத் தெரு !
சிவகாசி - 626 123 !
தமிழ் நாடு. !
செல்லிட பேசி : 98421-42192