தமிழின் முன்னுரை - பாஸ்கர் சூர்யா

Photo by Tengyart on Unsplash

அன்னையே...நீ.. அதிசயங்களின் பாசறை!
அன்பின் கருவறை..என் அழகுத் தமிழின் முன்னுரை..!
கண்ணுக்கு தெரிகின்ற கடவுள் நீ தானே..!சில நிமிடம் நான்!
காணாமல் போனாலும் கண்உறக்கம் இழப்பவள் நீ தானே..!!
ஐந்திரு மாத கருவறையில் என்னை காத்தவள் நீ தானே..! என்!
ஐம்புலன் நலமின்றியும் எனை அழகனென்பவள் நீ தானே..!!
மழலையாய் செய்த தவறை மகிழ்வோடு ரசித்தவள் நீ தானே..! இன்று!
மமதையால் செய்த தவறால் என்னோடு கலங்குபவள் நீ தானே..!!
பயணங்கள் தரும் சோகங்களில் நிழலாய் தொடர்பவள் நீ தானே..! நான்!
பயன்படாதவன் ஆனாலும் என்மேல் பாசமாய் இருப்பவள் நீ தானே..!!
கல்லில் தடுக்கி விழுந்தபோது அந்த கல்லை அடித்தவள் நீ தானே..! என்!
கண்ணீல் தூசு பட்டால் கலங்குபவளும் நீ தானே..!!
வேலையின் தாமதத்தில் சில நிமிடம் ஆனாலும்!
வீட்டுக் கதவின் நிலையாய் மாறுபவள் நீ தானே..!.!
உண்மையன்பு ஊறுகின்ற ஊற்று நீ தானே..!!
உனக்கு உதவாதவன் நானாலும் என்!
உச்சிமுகர்ந்து மீது முத்தம் தருபவள் நீ தானே..!!
தொலை தூரம் பயணத்திலே என்னோடு!
திருநீறாய் வருபவள் நீ தானே..! அந்த திருநீறும்!
கண்ணில் பட்டு கலங்கிடுமோ கண்..? என அதை ஊதி!
கலைத்தவள்.. நீ தானே..!!
!
அன்போடுஇதமிழ்ப்பண்போடுஇதேசப்பற்றோடு என்!
தேகத்தை வளர்த்தவளே..!!
இன்று என்னை தவியாய் தவிக்கவிட்டு!
தனியாய் சென்றது நீ தானே..?!
சோகம் கொண்டு நான் வாடும் போது!
எனை தேற்றுவது நீ தானே..!!
நீ பிரிந்த சோகத்துடன் நான் அழுகிறேன்..!
என் கண்ணீர் துடைக்க நீ வருவாயா..?!
என் உச்சி முகர்ந்து அன்பு முத்தம் தருவாயா..?!
உன் மடியில் கண்ணுறங்க சில நொடி எனக்கு தருவாயா..?
பாஸ்கர் சூர்யா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.